March 6, 2017
இந்திய குப்பையில் இருந்து ஒன்றரை மடங்கு மீத்தேன் எடுக்கலாம்: நெடுவாசல் வேளாண் குடிகளின் விளக்க கடிதம
விலை நிலங்களை நாசமாக்கும் திட்டத்தை கைவிட்டுவிட்டு, இந்திய குப்பையை குறிவைத்தாலே, ஒன்றரை மடங்கு மீத்தேன் கூடுதலாகக் கிடைக்கும் என்று வேளாண் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, செய்திபுனல் இணைய தளத்துக்கு அவர்கள் எழுதியுள்ள கடிதத்தின் விவரம் வருமாறு:-
எல்லா வளர்ச்சி திட்டங்களையும் கண்மூடித்தனமாக எதிர்ப்பதற்கு நாங்கள் ஒன்றும் முட்டாள்களோ பொறுக்கிகளோ கிடையாது.
மின்சாரத் தேவைக்காக மீத்தேன் எடுக்கிறோம் என்று சொல்லும் நீங்கள் ஏன் அதை விளை நிலங்களில் தான் எடுப்பீர்களா?
வேறு எங்கும் மீத்தேன் இல்லையா? எடுக்க முடியாதா?
உங்கள் இலக்கின் படி அடுத்த பதினைந்து வருடங்களுக்குள் 22 பில்லியன் கியூபிக் மீட்டர் மீத்தேன் எடுக்க வேண்டும்.
அதற்கு இந்தியா முழுவதும் 44 இடங்களை தேர்வு செய்துள்ளீர்கள்.
இதில் நெடுவாசலை போல விளைநிலங்களே அதிகம். உங்கள் இலக்கை யாருக்கும் பாதகம் இல்லாமல் அடைய வேறொரு வழி இருக்கிறது.
ஒரு டன் குப்பையில் இருந்து 40 கிலோ மீத்தேன் எடுக்கலாம்.
அரசின் புள்ளி விவரங்களின் படி இந்தியாவில் உள்ள அனைத்து மாநகராட்சிகளிலும், ஒரு நாள் சேரும் குப்பையின் அளவு ஒரு லட்சம் டன்.
இதிலிருந்து நாளொன்றுக்கு 40 லட்சம் கிலோ மீத்தேன் பெறலாம்.
இன்னும் தெளிவாக புரிய வேண்டும் என்றால் ஒரு வருடத்திற்கு உங்கள் திட்டத்தின்படி ஒரு பில்லியன் கிலோ மீத்தேன் தான் எடுக்க முடியும்.
ஆனால் மேலே சொன்னபடி குப்பையில் இருந்து வருடத்திற்கு 1.5 பில்லியன் கிலோ மீத்தேன் எடுக்க முடியும்.
அது மட்டும் இன்றி அதே குப்பையில் இருந்து 90 லட்சம் டன் இயற்கை உரமும் கிடைக்கும்.
இதை வைத்து நம்மால் 45 லட்சம் ஏக்கர் தரிசு நிலத்தை விளைநிலமாக மாற்றலாம்.
தூய்மை இந்தியா திட்டம் என்று கூறி கொண்டு கேமராவும் துடைப்பமும் சகலமுமாக அலைந்தீர்கள்.
தூய்மை இந்தியா என்பது தெருவில் உள்ள குப்பையை கூட்டி மலை மலையாக குவித்து வைப்பது இல்லை.
குப்பையை முறையாக உபயோகித்து தூய்மையான தேசமாக மாற்ற வேண்டும்.
மக்கள் நலத்திட்டம் என்பது மக்களுக்காக இருக்க வேண்டும் கார்பொரேட் முதலாளிகளுக்கு இல்லை.
இதை செய்ய உங்களை தடுப்பது எது? கமிஷன் குறைவு என்பதா?
விவசாயம் வளர்ந்து விடும் என்பதா? எதிர்காலத்தை கட்டமைக்கிறேன் என்று கூறி அதை கேள்விக்குறியாக்கி விடாதீர்கள்!
இந்திய குப்பையில் இருந்து ஒன்றரை மடங்கு மீத்தேன் எடுக்கலாம்: நெடுவாசல் வேளாண் குடிகளின் விளக்க கடிதம
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
March 06, 2017
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
March 06, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.