March 8, 2017
பொறுக்கி" சாமியின் கருத்து பாஜகவுடையதா?.. விளக்குவார்களா தமிழிசை, பொன் ராதா, எச்.ராஜா??
"பொறுக்கி" சுப்பிரமணியம் சாமி, தமிழர்களை மீண்டும் பொறுக்கி என்று கூறி விஷம் கக்கியுள்ளார். அவருடைய கருத்தை பாஜகவின் கருத்தாக எடுத்துக் கொள்ளலாமா என்ற கேள்வியை தமிழ் மக்கள் எழுப்பியுள்ளனர்.
"பொறுக்கி" சாமி தமிழர்களை எப்போதுமே அன்புடன் "பொறுக்கி" என்றுதான் அழைத்துக் கொண்டிருக்கிறார். இதற்கு இதுவரை தமிழ்நாட்டு மக்கள் பெரிய அளவில் ரியாக்ஷன் காட்டாமல் உள்ளனர் என்ற ஒரே காரணத்தால் தொடர்ந்து அதையே சொல்லிக் கொண்டிருக்கிறார்.
தற்போதும் கூட இலங்கை கடற்படைக் காடையர்களால் தங்கச்சி மடம் பகுதியைச் சேர்ந்த மீனவ இளைஞர் பிரிட்ஜோ கொல்லப்பட்ட கொடும் செயலைக் கண்டு மக்கள் கொதித்துள்ள நிலையில் அதையும் கிண்டலடித்துள்ளார் "பொறுக்கி" சாமி.
இந்த "பொறுக்கி" சாமி போட்டுள்ள ஒரு டிவீட்டில் கட்டுமரங்களை எடுத்துக் கொண்டு போய் இலங்கைப் படையுடன் தமிழ்நாட்டுப் "பொறுக்கிகள்" போரிடட்டும் என்று "பொறுக்கி" சாமி போட்டுள்ளார்.
இப்படி அடிக்கடி "பொறுக்கி" சாமி இப்படி தொடர்ந்து "பொறுக்கி பொறுக்கி" தமிழ்நாட்டு மக்களை வர்ணித்து வருதற்கு எந்த பாஜக தலைவரும் கண்டனமோ, எதிர்ப்போ, கருப்புக் கொடி காட்டி போராட்டமோ நடத்தியதில்லை. குறைந்தபட்சம் பிரதமரிடம் போய் மனு கொடுத்து எதிர்ப்பைக் கூட காட்டியதில்லை.
ஆனால் தமிழக மீனவர் ஒருவர் செத்துக் கிடக்கும் நிலையிலும் அதையும் கிண்டிலடித்து டிவீட் போட்டிருக்கும் "பொறுக்கி" சாமியின் கருத்தை பாஜகவின் கருத்தாக எடுத்துக் கொள்ளலாமா என்று தமிழக மக்கள் கேட்கிறார்கள். இதற்கு தமிழிசை செளந்தரராஜன், எச்.ராஜா, இல.கணேசன், பொன் ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன், நிர்மலா சீனிவாசன் போன்ற பாஜகவின் அரும் பெரும் தலைவர்கள் பதிலளிப்பார்களா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
பொறுக்கி" சாமியின் கருத்து பாஜகவுடையதா?.. விளக்குவார்களா தமிழிசை, பொன் ராதா, எச்.ராஜா??
Reviewed by மறத்தமிழன்
on
March 08, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
March 08, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.