March 14, 2017
தலீத் மாணவர் முத்துக்கிருஷ்ணன் தற் கொலைக்கு RSS BJP யே காரணம்... திருமாவளவன் பரபரப்பு குற்றச்சாட்டு
கல்வியை காவி மயமாக்க பாஜக முயற்சிப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார்.
ஜெஎன்யுவில் ஆய்வு படிப்பு படித்து வந்த சேலத்தை சேர்ந்த தலீத் மாணவர் முத்துக்கிருஷ்ணன் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முத்துக்கிருஷ்ணனின் பெற்றோர் அவரது சாவில் மர்மம் இருப்பதாக தெரிவித்துள்ளனர். தமிழக மாணவர் உயிரிழப்பு குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை அசோக் நகரில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது,
ரூ.கோடி இழப்பீடு வழங்க வேண்டும்
டெல்லியில் தமிழக மாணவர் முத்துக்கிருஷ்ணன் உயிரிழந்தது குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும். உயிரிழந்த முத்துக்கிருஷ்ணனின் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்.
அவமானம் தொடர்கிறது
மாணவர் உயிரிழப்பு விவகாரத்தில் தமிழ அரசு உடனே தலையிட வேண்டும்.
தமிழக மாணவர்களுக்கு பாதுகாப்பு இல்லை. தலீத் மாணவ, மாணவிகளை சாதியின் பெயரால் அவமானப்படுத்துவது தொடர்கிறது.
ஆர்எஸ்எஸ் இறங்கி வேலை செய்கிறது.
முத்துக்கிருஷ்ணன் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவேண்டும். பாஜக ஆட்சிக்கு வந்தப்பின் ஆர்எஸ்எஸ் இறங்கி வேலை செய்கிறது. இவ்வாறு திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசினார்.
கல்வியை காவி மயமாக்க முயற்சி
மேலும் கல்வியை காவி மயமாக்க பாஜக முயற்சிப்பதாக அவர் கூறினார். அந்த நோக்கத்தில் தால் பாஜக அரசு செயல்படுகிறது என்றும் திருமாவளவன் குற்றம்சாட்டினார்.
தலீத் மாணவர் முத்துக்கிருஷ்ணன் தற் கொலைக்கு RSS BJP யே காரணம்... திருமாவளவன் பரபரப்பு குற்றச்சாட்டு
Reviewed by மறத்தமிழன்
on
March 14, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
March 14, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.