Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

March 9, 2017

கச்சத்தீவை மீட்டால் மட்டும் மீனவர்கள் பிரச்சினை தீர்ந்து விடாது - பொன். ராதாகிருஷ்ணன்


கச்சத்தீவை மீட்டு விட்டால் மட்டும் மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு கிடைத்து விடாது என்று மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

ராமேஸ்வரம் தங்கச்சி மடத்தில் மீனவர் பிரிட்ஜோ படுகொலைக்கு நீதி கேட்டு மூன்று நாட்களாக போராட்டம் நடைபெற்று வருகிறது. இது குறித்து கருத்து கூறியுள்ள மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், கச்சத்தீவை மீட்டால் மட்டும் மீனவர் பிரச்சினைக்கு தீர்வு கிடைத்து விடாது என்று தெரிவித்துள்ளார்.

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், மத்திய அரசின் உண்மையான முயற்சிகளை போராட்டக்குழுவினர் புரிந்து கொள்ள வேண்டும் என்றார். மீனவர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக மத்திய அரசு விசாரணை நடத்தி வருகிறது.

உயிரிழந்த மீனவர் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவிக்க தமிழர்கள் ஒன்று சேரலாம். அதே நேரத்தில் அரசியல் கட்சித்தலைவர்கள் பலரும் ராமேஸ்வரத்தில் போராட்டம் நடத்துவதோடு கச்சத்தீவை மீட்கவேண்டும் என்று வலியுறுத்துகின்றனர். கச்சத்தீவை மீட்பதன் மூலம் மட்டும் மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு கிடைத்து விடாது என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், நாடுமுழுவதும் பயங்கரவாதிகள் மாறுவேடங்களில் ஊடுருவியுள்ளதாக கூறினார். மேலும் அவர் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போதே தான் எச்சரித்ததாகவும் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.