Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

March 15, 2017

பெண்ணின் பிணத்தை வைத்து, சசி விடுதலையாக அகோரி பூஜை செய்தேன்! போலீசை மிரட்டிய மந்திரவாதி..?!


பெரம்பலூரில் இறந்த பெண்ணின் உடலை வைத்து நள்ளிரவு ரகசிய பூஜை செய்த மந்திரவாதி சிக்கி கைதானார்.  விசாரணையில் மந்திரவாதி கூறியதை கேட்டு அதிர்ந்து போனது காவல்துறை வட்டாரம்.

மந்திரவாதி கார்த்திக், இவரின் மனைவி தீபிகா இருவரையும், பெரம்பலூா் போலீசார் சில தினங்களுக்கு முன்னா் வீட்டில் வைத்து கைது செய்தனா்.

அப்போது அவா்கள் அழுகிய நிலையில் உள்ள பிணத்தை வைத்து பூஜை செய்து கொண்டு இருந்தனர்.

இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார் பிணம் எப்படி வந்தது என்று கேட்டு பிணத்தை பணத்திற்காக விற்பனை செய்த 4 பேரையும் கைது செய்தனா்.

மந்திரவாதி கார்த்திக் போலீசார் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்களை கூறி அதிரவைத்துள்ளான். விசாரணையில் மந்திரவாதி கார்த்திக் கூறியதாவது,

இறந்த பெண் உடலின் மா்ம உறுப்பின் மீது அமர்ந்து பூஜை செய்ததால் எனக்கு அபூர்வ சக்தி கிடைத்தது. ஆவிகளுடன் பேச முடிந்தது என போலீஸ் விசாரணையில் மந்திரவாதி கார்த்திகேயன் தெரிவித்து இருக்கிறான்.

தற்கொலை செய்து கொண்ட மாணவி அபிராமியின் உடலை வைத்து 45 நாட்களுக்கு மேலாக நள்ளிரவு பூஜை செய்து இருக்கிறான்.

அதே போல் பல உடல்களை வாங்கி இது போன்ற மாந்தீரிக வேலைக்கு பயன்படுத்தி இருப்பது தெரிய வந்துள்ளது.

தன்னிடம் 2,000 ஆவிகள் இருப்பதாகவும், தான் இட்ட வேலைகளை அவைகள் செய்யும் எனவும், விசாரணை அதிகாரிகளை மிரட்டி இருக்கிறான் இன்னும் ஒரு வாரம் தள்ளி என்னை கைது செய்யுங்கள்.

சசிகலா சிறையில் இருந்து வெளி வர அகோரி பூஜை செய்து கொண்டு இருக்கிறேன். அது முடிய இன்னும் ஒரு வாரம் இருக்கிறது. விடுங்கள், அந்த பூஜை முடிந்ததும் நானே வந்து சரணடைந்து விடுகிறேன் என்று கூறியும் மிரட்டி இருக்கிறான் கார்த்திகேயன்.

அவன் பேச்சு சைக்கோ மாதிரி இருப்பதாக போலீஸ் கருதுகிறது. அத்துடன் அவனிடம் குறி கேட்க, நிறைய அரசியல்வாதிகள் வந்து சென்று இருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. என்ன கொடுமை சார் இது?

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.