March 9, 2017
ஆசிய பசிபிக் நாடுகளின் லஞ்ச பட்டியலில் முதலிடத்தில் இந்தியா: போலீசார் ரொம்ப மோசம்; மதத்தலைவர்களும் தப்பவில்லை
ஆசியா மற்றும் பசிபிக் நாடுகளில் அதிக லஞ்சம் வாங்கும் நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இந்தியாவில் லஞ்சம் வாங்குவதில் முதல் இடத்தை போலீசார் பிடித்துள்ளனர். சர்வதேச லஞ்ச ஒழிப்பு உரிமை இயக்கத்தின் தலைமையகம் ஜெர்மனியின் பெர்லின் நகரில் இயங்கி வருகிறது. இந்த இயக்கம் உலகின் லஞ்சம் வாங்குவதில் கைதேர்ந்த நாடுகள் எவை என்ற தலைப்பில் ஆய்வு ஒன்றை நடத்தியது. இந்த ஆய்வில் ஆசியா மற்றும் பசிபிக் பகுதியில் 16 நாடுகளை சேர்ந்த சுமார் 20,000க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். இந்த ஆய்வின் முடிவில் உலகளவில் லஞ்சம் வாங்குவதில் கைதேர்ந்த நாடுகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அந்த வகையில் லஞ்சம் வாங்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முதல் இடம் பிடித்துள்ளது. இந்தியா பற்றிய விவரம் வருமாறு:
1. இந்தியாவில் 41% மக்கள் அதாவது 10 பேரில் 7 பேர் தங்களுக்கு சாதகமான காரியங்களை நிறைவேற்றிக் கொள்ள லஞ்சம் வழங்கி வருகிறார்கள். இவர்கள் அரசு வழியிலான வேலைகளை செய்ய அதிகம் லஞ்சம் கொடுக்கிறார்கள்.
2. கடந்த ஒரு வருடத்தில் இதுபோல் லஞ்சம் பெரும் நபர்களின் எண்ணிக்கை 40 சதவீதம் அதிகரித்து விட்டது. அதே சமயம் 63 சதவீதம் பேர் தனிப்பட்ட முறையில் லஞ்சம் கொடுப்பதற்கு எதிராக போராட்டம் நடத்துவதாக தெரிவித்துள்ளனர்.
3. அரசு சான்றிதழ்கள் பெறவே 59 சதவீதம் லஞ்சம் வழங்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அடுத்தபடியாக கல்வி வசதி பெற 58 சதவீதம் லஞ்சம் வழங்குகிறார்கள்.
4. லஞ்சம் வாங்குவதில் முதல் இடத்தை போலீசார் பிடித்துள்ளனர். 85 சதவீதம் போலீசார் லஞ்சம் வாங்குகிறார்கள். அரசு அதிகாரிகள் 84 சதவீதம், வணிக நிர்வாகிகள் 79 சதவீதம், கவுன்சிலர்கள் 78 சதவீதம், எம்பிக்கள் 76 சதவீதம் என முதல் 5 இடத்தை பிடித்துள்ளனர்.
5. வரித்துறை அதிகாரிகள் 74 சதவீதம் பெற்று 6வது இடத்தை பிடித்துள்ளனர். மதத்தலைவர்கள் 71 சதவீதத்துடன் 7வது இடத்தை பிடித்துள்ளனர். நீதித்துறை 66 சதவீதம், அரசு உயர் அதிகாரிகள் 59 சதவீதம் ஊழல் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். இதில் உயர்அதிகாரிகளில் பெரும்பாலானோர் கடந்த ஒரு வருடமாக லஞ்சம் பெறுவது தெரிய வந்துள்ளது.
6. ஊழல் செய்யாதவர்கள் பட்டியல் பார்த்தால் அரசு அதிகாரிகளுக்கு வெறும் 6 சதவீதம் மட்டுமே கிடைத்துள்ளது. போலீசாருக்கு 7 சதவீதம், கவுன்சிலர்கள் மற்றும் வணிக நிர்வாகிகள் 9 சதவீதம், அரசு உயர் அதிகாரிகள் 26 சதவீதம், நீதித்துறை 19 சதவீதம், எம்பிக்கள் 12 சதவீதம் பெற்றுள்ளனர்.
7. மதத்தலைவர்களில் லஞ்சம் மற்றும் ஊழல் செய்வோரில் 71 சவீதமாக தெரியவந்துள்ள நிலையில், இவர்களில் 37 சதவீதம் பேர் ஊழல் பேர்வழிகள் என்றும், 23 சதவீதம் பேர் பயங்கர ஊழல் பேர்வழிகள் என்றும் 11 சதவீதம் பேர் முழுமையான ஊழல் பேர்வழிகள் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.
8. தேசிய மற்றும் உள்ளூர் அளவில் அரசியல் முடிவுகளை எடுப்பவர்கள் அல்லது உருவாக்குபவர்கள் பலர் ஊழல்வாதிகளாக உள்ளனர்.
9. அரசு பள்ளிகள் 58 சதவீதம், சுகாதாரநிலையங்கள் 59 சதவீதம் அதிக லஞ்சம் வாங்கும் இடமாக உள்ளன. இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
* ஆசியா மற்றும் பசிபிக் பகுதியில் வசிக்கும் மக்களில் 90 கோடி பேர், அதாவது நான்கில் ஒருவர் அரசு சேவைகளுக்காக லஞ்சம் கொடுக்கிறார்கள். இதில் இந்தியா, சீனா நாடுகள் முக்கிய இடம் பிடித்துள்ளன.
* 22 சதவீதம் பேர் லஞ்சம் குறைந்திருப்பதாகவும், 40 சதவீதம் பேர் லஞ்சம் அதிகரித்து இருப்பதாகவும் (இந்தியாவில் 41 சதவீதம் பேர்) தெரிவித்துள்ளனர்.
* அரசு பள்ளிகள், மருத்துவனைகள், அரசு ஆவணங்கள், பொதுநல திட்டங்கள், போலீஸ், நீதிமன்றம் ஆகியற்றில் வசதி பெற லஞ்சம் கொடுக்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
* இந்தியா, இந்தோனேசியா, தாய்லாந்து மக்களில் பாதிக்கும் மேற்பட்டோர் தங்கள் நாட்டு அரசு எடுக்கும் நடவடிக்கைகளில் முழு நம்பிக்கை வைத்துள்ளனர்.
ஆசிய பசிபிக் நாடுகளின் லஞ்ச பட்டியலில் முதலிடத்தில் இந்தியா: போலீசார் ரொம்ப மோசம்; மதத்தலைவர்களும் தப்பவில்லை
Reviewed by மறத்தமிழன்
on
March 09, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
March 09, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.