Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

March 12, 2017

நிர்மலா சீதாராமனின் கோரிக்கையை ஏற்க மறுத்த மக்கள்... தொடரும் மீனவர்கள் போராட்டம்!


மீனவர் பிரிட்ஜோ இலங்கை கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்டதைக் கண்டித்தும், மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு கோரியும் கடந்த ஆறு நாட்களாக, ராமேஸ்வரம் தங்கச்சிமடத்தில் மீனவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், மத்திய இணையமைச்சர்கள் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் நிர்மலா சீதாராமன் இன்று தங்கச்சிமடத்தில் போராட்டக்காரர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். மீனவர் பிரிட்ஜோவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து பேசிய நிர்மலா சீதாராமன், 'மத்திய அரசு மீனவர்கள் பிரச்னைக்கு உரிய நடவடிக்கை எடுக்கும். வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் தமிழக மீனவர்கள் பிரச்னை குறித்து விவாதிக்க உள்ளோம்.
எனவே போராட்டத்


நிர்மலா சீதாராமனின் கோரிக்கையை ஏற்க மறுத்த மக்கள், 'கடந்த 35 ஆண்டுகளாக 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் இலங்கை கடற்படையால் கொல்லப்பட்டுள்ளனர். அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. இதற்கு மேல் பொறுமை காக்க முடியாது. வெறும் பேச்சுவார்த்தையை நம்பி போராட்டத்தை கைவிட முடியாது', என்று திட்டவட்டமாக கூறிவிட்டனர். நிர்மலா சீதாராமன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சீதாராமன், 'தமிழக மீனவர்கள் பிரச்னை குறித்து மத்திய அரசு கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கும். நியாயம் கிடைக்க பிரதமர் உறுதியான நடவடிக்கை எடுப்பார். இறந்த 6 நாட்கள் கடந்தும் ஒரு தாய் தன் மகனைப் பார்க்காமல் போராட்டக் களத்தில் இருக்கிறார். அவர், பொதுநலன் கருதி, தன் மகனின் உடலைப் பெற்று நல்லடக்கம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன். அதற்கு, போராட்டக் குழுவினருடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுப்பதாக கூறியுள்ளார் இறந்த மீனவரின் தாய். நல்ல முடிவை எடுப்பார் என்று நம்புகிறேன்.' என்று தெரிவித்துள்ளார்.தை கைவிடுங்கள். இறந்தவரின் உடலை பெற்று, அடக்கம் செய்யுங்கள்', என்றார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.