Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

March 18, 2017

“தொழில்” நுட்பம் வளர்ந்துருச்சு..!! வாட்ஸ்அப்பில் விபச்சாரம், பேஸ்புக்கில் பிரசவமா..??


நாளுக்கு நாள் வளர்ந்து வரும் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப, “தொழில்” நுட்பமும் வளர்ந்து கொண்டே வருகிறது. புது புது கண்டுபிடிப்புகளை காலத்திற்கு ஏற்றவாறு மாற்றி வருகின்றனர்.
கடந்த வருடம் இணையதளம் மூலம் விபச்சாரம் நடப்பதாக கூறி பாலியல் தொழில் இணையதள பக்கங்களுக்கு இந்தியா முழுவதும் தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது சமூக வலைதளமான வாட்ஸ்அப் மூலம் பாலியல் தொழில் செய்து வந்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்தனர்.
உத்திரப்பிரதேச மாநிலம் காசியாபாத் நகரில் தாரா(45) என்ற பெண் வாட்ஸ்அப் செயலி மூலம் குரூப் ஒன்றை தொடங்கி, அதில் பெண்களின் புகைப்படங்களை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பி பாலியல் தொழில் செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் இதுகுறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் தகவல் அளித்துள்ளார். அதை வைத்து தாரா மற்றும் அவரது உதவியாளர்கள் மூன்று ஆண் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
விசாரணையில், 8 வருடங்களாக பாலியல் தொழில் செய்து வரும் தாரா, கடந்த 3 வருடங்களாக வாட்ஸ்அப் மூலம் இதை செய்து வருவது தெரியவந்துள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.