Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

March 2, 2017

தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் முட்டை விற்பனை..! அச்சத்தில் பொதுமக்கள்..!


தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் முட்டைகள் விற்பனையாகி வருகிறது. இதனை கண்டுப்பிடிப்பதும் மிகவும் சிரமம்.
இந்த நிலையில் இன்று காங்கயம் அருகே பிளாஸ்டிக் முட்டை விற்கப்படுவது தெரியவந்துள்ளது.
திருப்பூர் மாவட்டம் காங்கயம் சென்னிமலை சாலை சாவடி கிராமத்தில் உள்ள மளிகை கடையில் பெரியசாமி என்பவர் நேற்று முட்டை வாங்கியுள்ளார்.
அந்த முட்டையை வீட்டிற்கு கொண்டு சென்று ஆப்பாயில் போட தோசை கல்லில் உடைத்து ஊற்றியுள்ளார். அப்போது முட்டை சரியாக வேகாமல் பிளாஸ்டிக் பேப்பர் போன்று படலம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து கடைக்காரரிடம் பெரியசாமி முறையிட்டுள்ளார்.  அப்போது, கடைக்காரர் தான் சென்னிமலையில் இருந்து மொத்தமாக முட்டை வாங்கியதாகவும்,
இதில் பிளாஸ்டிக் முட்டை இருந்திருக்கலாம் என தெரிவித்து கடையில் உள்ள மற்ற முட்டைகளை விற்பனை செய்யாமல் திருப்பி அனுப்புவதாகவும் கூறியுள்ளார்.
இந்த முட்டை பிளாஸ்டிக் முட்டை என்றும் இதனை சாப்பிட்டால் உடல் நலம் பாதிக்கும் என்றும் இப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
இந்த பிளாஸ்டிக் முட்டை குறித்து உணவு பொருள் பாதுகாப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே நிலை தமிழகம் முழுவதும் நீடிக்கிறது. பிளாஸ்டிக் முட்டை சப்ளையாவதை தடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பொதுமக்கள், முட்டை சாப்பிடுவதையே நிறுத்தும் நிலை ஏற்பட்டு தொடா் அச்சத்தில் உள்ளனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.