Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

March 13, 2017

டீக்கடையில் டீ ஆத்தின நீ ஒரு முதலமைச்சர் : பன்னீர் செல்வத்தை வறுத்தெடுத்த வளர்மதி!


பன்னீர் செல்வத்தை ஜீரோ பன்னீர் செல்வம் என்று தான் அதிமுகவின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அழைப்பார் என தமிழ்நாடு பாடலூல் நிறுவனத்தில் தலைவர் வளர்மதி கூறியுள்ளார்.
அதிமுகவின் ஒரே எதிரி யார் என்றால் அது திமுக கட்சிதான். தீயசக்தியாக விளங்கும் திமுக கட்சியை நாங்கள் அழிக்கவிருக்கிறோம்.
பன்னீர் செல்வம் போன்றவர்களை நாங்கள் எதிரியாக கூட நினைப்பது கிடையாது. ஏனெனில் அவர் ஒரு ஜீரோ பன்னீர் செல்வம். பதவி அரிப்பால் இதுபோன்று நடந்துகொள்கிறார்.
டீக்கடையில் டீ ஆத்திக்கொண்டிருந்த அவரை முதலமைச்சராக்கியவர் எங்கள் அண்ணன் டிடிவி தினகரன்.
ஒரு டீக்கடைக்காரராக இருந்த உன்னை, அரசியலுக்குள் அழைத்து வந்து அம்மாவிடம் அறிமுகப்படுத்தி உனக்கு பதவி பெற்றுக்கொடுத்தார்.
அப்படியிருக்கையில் சின்னம்மா மற்றும் டிடிவி தினகரன் அவர்களை பற்றி பேசுவதற்கு பன்னீர் செல்வத்துக்கு என்ன யோக்கிதை இருக்கிறது என கூறியுள்ளார்.
பதவி சுகம் கிடைக்க வேண்டும் என்பதற்காக கட்சியை உடைக்க பார்க்கிறார் பன்னீர் செல்வம், ஆனால் இது ஒருபோதும் நடக்காது என கூறியுள்ளார்.g

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.