March 5, 2017
இயற்கை மொழியினும் வலியதோ...?
இயற்கை மொழியினும் வலியதோ...?
Poetry : Mohan Sundaram
இயற்கை மொழி
அறிந்திடவேண்டி
மலையின் விளிம்பிற்கு
வந்து
நின்றேன்.
எத்தனை அமைதி!
உலகின் உன்னத மொழி
'மௌனம்' என்று
முதல் பாடத்தை
தொடங்கியது.
நீரோடை பாய்ந்துவரும்
வழியில்
சரளைக்கற்களின்
சந்திப்பில் எழும்
சலசலப்பு பேச்சொலியும்
என்மொழிதான்
என்றது.
காற்று தன் கைக்குழந்தை
தென்றலை
நடைபழக
அழைத்துவர
நசுங்கும்
சருகொலியோசை-
இலைகளிலிருந்து
பனித்துளிகள்
குளத்தின் மீது
குதிக்க எழும்
நீர்த்தரங்க ஒலியோசை-
பூவை
மயக்கும் மந்திர
பூசையில்
சில்வண்டு முணுமுணுக்கும்
ரீங்காரச் சுரவொலி-
எல்லாம்
என்மொழிதான்
என்றது!
"பக்" "பக்" "பக்" "பக்"என்ற
ஒருசொல்லிற்கு மேல்
இன்றுவரை
தன் குஞ்சுகளுக்கு
சொல்லித்தரா
வாத்துத் தாயின்
அரிச்சுவடி...
அந்த மலையருவி
தன் சுரத்தை
லயம் மாறாது
பாறை இசைக் கருவிகளில்
மேளமாய் வாசித்துப் பழகும்
இசையொலி...
கானகதேசத்து
சுசீலாவென
அந்த கருங்குயில்
குழைத்துத் தரும்
பின்னணி
குரலிசை...
இவையும் இயற்கை
மொழியே என்று
சொன்னது.
தூரத்து குரல் ஒன்று
என்னைக் கூப்பிடுகிறது...
"மோகன்...,போகலாம் வா!"
இது என் தமிழ்மொழியின்
வார்த்தைகள்...!
ஓர் அழைப்பில்
என்னை அசைக்கும்
தாய்மொழி வந்த
திசைநோக்கி இறங்குகின்றேன்.
ஈர்ப்பதில் இயற்கை
மொழியினும்
வலியதோ
இனிய என் தாய்மொழி?
இயற்கை மொழியினும் வலியதோ...?
Reviewed by Admin
on
March 05, 2017
Rating: 5
Reviewed by Admin
on
March 05, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.