Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

March 23, 2017

காதை பிளக்கும் பட்டாசு கலாச்சாரம்: சுற்றுச்சூழலுக்கும் கேடு ஏற்படுவதாக புகார் - அரசு நடவடிக்கை எடுக்குமா?


திருமணம், வரவேற்பு, அரசியல் விழா, மரண ஊர்வலம் என்று மகிழ்ச்சி, துக்கம் அனைத்திலும்அதீத சப்தத்துடன் கூடிய பட்டாசுகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் அலறுவதுடன் சுற்றுச்சூழலுக்கு கேடு ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது. கொண்டாட்டங்களில் ஆர்ப்பரிப்பு தவிர்க்க முடியாததாக இருந்து வருகிறது. இதனால் பல நிகழ்வுகளிலும் பட்டாசு வெடித்து... இசை முழங்க மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் தன்மை இருந்து வருகிறது. இதற்கு தீபாவளி போன்ற பண்டிகையை கூறலாம். ஆனால் தீபாவளிக்கு தான் பட்டாசு என்ற நிலை தற்போது வெகுவாய் மாறி விட்டது. திருமணம், சடங்கு, வரவேற்பு, அரசியல் விழாக்கள், இறுதி ஊர்வலம், வெற்றி கொண்டாட்டம் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளிலும் உணர்வுகளை அழுத்தமாக பதிவு செய்ய பட்டாசுகளை பரவலாக பயன்படுத்த துவங்கினர். இதனால் மாதத்தின் பெரும்பகுதி நாட்களில் பட்டாசு ஓசையையும், அதனால் ஏற்படும் மாசும் தவிர்க்க முடியாததாக இருந்து வருகிறது.

திண்டுக்கல்லை பொறுத்தளவில் பட்டாசு கலாசாரம் அதிகமாகவே உள்ளது. திருவிழா மட்டுமல்லாது பல்வேறு சிறு நிகழ்ச்சிகளில் கூட அதிக சப்தத்தில் பட்டாசுகளை வெடிப்பது வாடிக்கையாக இருந்து வருகிறது. அதிக சப்தம் ஏற்பட்ட தங்கள் உணர்வுகளை தூக்கலாக வெளிப்படுத்தும் நோக்கிலே பலரும் செயல்படுகின்றனர். இதனால் ரோடு முழுவதும் பேப்பர் குவியலும், அதீத சப்தத்தினால் முதியோர், குழந்தைகள், நோயாளிகள் பரிதவிக்கும் நிலையும் அதிகம் உள்ளது. போக்குவரத்து உள்ள சாலையின் மத்தியில் இந்த வெடிகளை பற்ற வைப்பதால் வாகன நெரிசலும் ஏற்படுகிறது. பேப்பர் குவியல் வாகன கண்ணாடிகளில் ஒட்டி கொண்டு ஓட்டுநர்களுக்கு சிரமத்தையும் ஏற்படுத்துகிறது. மேலும் ஒவ்வொரு வீடு, கடைகள் முன்பு தேங்கி குப்பையாக மாறிவிடுகிறது. இதில் இருந்து எழும் ரசாயன புகையினால் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே பட்டாசுகள் வெடிப்பதை முறைப்படுத்த வேண்டும். அதிக சப்தம் இல்லாத வெடிகளை பயன்படுத்த மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.