Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

March 18, 2017

சுவையான இறால் குழம்பு



என்னென்ன தேவை?

எண்ணெய் - தேவையான அளவு
பெருஞ்சீரகம் - 1 தேக்கரண்டி
பட்டை - 1 சிறிய துண்டு
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
தக்காளி - 1
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
மல்லி தூள் - 1 தேக்கரண்டி
கரம்மசாலா தூள் - 1 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு
கொத்தமல்லி இலை - 2 தேக்கரண்டி


அரைக்க...

வெங்காயம் - 1
தக்காளி - 1

ஊறவைக்க...

இறால்கள் - 15-20
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி


எப்படி செய்வது?

முதலில் ஊறவைப்பதற்கு கொடுக்கப்பட்ட பொருட்கள் அனைத்து கலந்து வைக்கவும். வெங்காயம் மற்றும் தக்காளியை மிக்ஸியில் போட்டு மசித்துக் கொள்ளவும். இறால்களை ஒரு பாத்திரத்தில் எடுத்து அதனுடன் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கலந்து 10 நிமிடம் ஊற விடவும். பின்னர் கடாயில் எண்ணெய் விட்டு இறால்களை போட்டு நன்றாக வேக விடவும். அதை ஒரு பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.

குழம்பு செய்ய...

வாணலில் எண்ணெய் விட்டு பெருஞ்சீரகம், பட்டை, வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும். பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து 1 நிமிடம் வதக்கவும், பிறகு தக்காளி, அரைத்து வைத்துள்ள விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். அதனுடன் மிளகாய் தூள், மல்லி தூள், கரம் மசாலா தூள் சேர்த்து வதக்கி தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும். நன்கு கொதி வந்த பின் வேகவைத்த இறால் துண்டுகளை போட்டு கலக்கவும். எண்ணெய் மேலே மிதந்து வரும் வரை வேக விடவும். இறக்கும்போது கொத்தமல்லி இலை தூவி விடவும்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.