Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

March 2, 2017

ஜெ., கீழே தள்ளிவிடப்பட்டு, காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதி : பி.எச்.பாண்டியன் பரபரப்பு புகார்


சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த சட்டப்பேரவையின் முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் பரபரப்பு பேட்டியளித்தார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், அப்பல்லோ மருத்துவமனையில் இருந்த 27 சிசிடிவி கேமராக்களை அப்புறப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் போயஸ் இல்லத்தில் ஜெயலலிதா கீழே தள்ளிவிடப்பட்டு, காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார். இதை தாம் கூறவில்லை என்றும், அப்பல்லோ மருத்துவமனை டிஸ்சார்ஜ் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதை தான் தாம் இப்போது வெளிஉலகிற்கு சொல்வதாகவும் கூறினார், மேலும் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்டு வந்த சிகிச்சையை நிறுத்த சொன்னது யார் என வினவியுள்ளார். அப்பல்லோ மருத்துவமனையின் சிகிச்சை அறிக்கையை ஆதாரமாக காட்டி பி.எச்.பாண்டியன் பல கேள்விகளை கேட்டுள்ளார். மேலும் ஜெயலலிதா வீடு மற்றும் மருத்துவமனை நுழைவாயில் சிசிடிவி கேமரா பதிவுகளை வெளியிட வேண்டும் என்றார். ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்டிருந்த கறுப்பு பூனை பாதுகாப்பை நிறுத்த சொன்னது யார் என வினவினார். மேலும் மருத்துவமனையில் இருந்த கமாண்டர்களை திரும்ப அனுப்பியது யார் என்று வினவிய அவர், குற்றவாளிகளை தாங்கள் நெருங்கிவிட்டதாக குறிப்பிட்டார்.

மேலும் பேசிய அவர் கடந்த 2015-ல் லண்டன் எலிசபெத் மருத்துவமனைக்கு ஜெயலலிதாவை அழைத்து செல்ல திட்டமிடப்பட்டிருந்தது. ஜெயலலிதாவை அழைத்து செல்ல மருத்துவ சிகிச்சை வசதி உள்ள ஹெலிகாப்டர் சென்னை வந்திருந்தது. ஜெயலலிதாவை சிகிச்சைக்காக லண்டன் செல்லவிடாமல் தடுத்தது யார் என வினவினார். பின்னர் பேசிய அவரது மகன் மனோஜ் பாண்டியன், சிகிச்சையின் போது ஜெயலலிதாவிற்கு வழங்கப்பட்ட உணவு விவரங்கள் குறித்த ஆய்வறிக்கையை வெளியிட வேண்டும் என்றார். சிங்கப்பூர் பிசியோதெரபிஸ்ட்டை வர வைத்தது ஏன் என்றும், மேலும் ஜெயலலிதா முகத்தில் இருந்த துளைகள் எப்படி ஏற்பட்டது என மனோஜ் பாண்டியன் கேள்வி எழுப்பியுள்ளார். டிசம்பர் 5-ம் தேதி ஜெயலலிதாவின் மூச்சை நிறுத்த அனுமதியளித்தது யார் ?, ரத்த உறவுகளின் அனுமதியில்லாமல் ஜெயலலிதாவின் மூச்சை நிறுத்தியடி எப்படி என பல அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.