பெருங்களத்தூர் அருகே மதுபோதையில் மனைவியிடம் ஆபாச வீடியோக்களை காண்பித்து, பாலியல் பலாத்காரம் செய்த கணவனை சுத்தியலால் அடித்துக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பெருங்களத்தூரை சேர்ந்தவர் கணேசன். கொத்தனாராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி விழுப்புரத்தில் மனைவி உள்ள நிலையில், சத்யா என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து பெருங்களத்தூரில் வசித்துவந்தார்.
இந்நிலையில், கணேசன் தினந்தோறும் மது அருந்திவிட்டு சத்யாவிடம் ஆபாச வீடியோக்களை காண்பித்து பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார்.
இதனால் கோபமடைந்த சத்யா, தன் கணவன் கணேசனை சுத்தியலால் தலையில் அடித்துக் கொலை செய்தார். பின்னர் பீர்கன்கரணை காவல் நிலையத்துக்குச் சென்று சரணடைந்தார்.


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.