March 12, 2017
பன்னீரை வைத்து தமிழகத்தில் காலூன்ற திட்டம்: ஆட்சி கலைப்புக்கு ஆயத்தமாகும் பா.ஜ.க!
உத்திரபிரதேசத்தில் பிரம்மாண்டமான வெற்றியை சுவைத்த பெருமிதத்தில் இருக்கின்றனர் மோடி, அமித் ஷா உள்ளிட்ட பா.ஜ.க மூத்த தலைவர்கள்.
இனி அவர்களது அடுத்த குறி தமிழ்நாடுதான். தமிழகத்தில் ஒரு இடம் கூட பாரதிய ஜனதாவுக்கு இல்லை என்ற நிலையை முற்றாக மாற்ற வேண்டும் என்பதில் அவர்கள் உறுதியாக இருக்கின்றனர்.
உ.பி.வெற்றிக்கு வாழ்த்து சொன்ன பன்னீரிடம், பாரதிய ஜனதா மூத்த தலைவர் ஒருவர், நீங்கள் எதிர்பார்த்தது எல்லாம் விரைவில் நடக்கும், உற்சாகமாக செயல்படுங்கள் என்று கூறியுள்ளார்.
எடப்பாடி ஆட்சியை மட்டும் கலைத்து விட்டால் போதும். அதன் பிறகு சசிகலா தரப்பில் இருக்கும் கொஞ்ச நஞ்ச பேர்களும் பன்னீர் பக்கம் வந்து விடுவார்கள்.
தமிழத்தில் ஆட்சியை பிடிப்பது அவ்வளவு எளிதல்ல. ஆனாலும் காலூன்றுவதற்கு இதுவே சரியான தருணம். பன்னீரே இதற்கு சரியான சாய்ஸ் என்று பா.ஜ.க தலைவர்கள் எண்ணுகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக, பன்னீருக்கு தேவையான அனைத்தையும் செய்து கொடுக்க மத்திய அரசில் உள்ள முக்கிய பிரமுகர்களுக்கு உத்தரவு போடப்பட்டுள்ளது.
அதேபோல், ஆட்சி கலைப்புக்கு திமுக மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளுக்கும் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்றும் அவர்கள் பன்னீருக்கு அறிவுறுத்தி உள்ளனர்.
பன்னீரை வைத்து தமிழகத்தில் காலூன்ற திட்டம்: ஆட்சி கலைப்புக்கு ஆயத்தமாகும் பா.ஜ.க!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
March 12, 2017
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
March 12, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.