March 13, 2017
கோடிக்கணக்கில் சொத்துக்களை குவித்த பெரம்பலூர் மந்திரவாதி- காமத்தை தூண்டும் மருந்துகள் கண்டுபிடிப்பு
பெரம்பலூர் மந்திரவாதி இறந்த பிணங்களை வைத்து பூஜை செய்து கோடிக்கணக்கில் சொத்துக்களை குவித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மந்திரவாதி கார்த்திகேயன், அவரது மனைவி நசீமா.
பெரம்பலூர்:
பெரம்பலூரை சேர்ந்த மந்திரவாதி கார்த்திகேயன் இறந்த பெண்ணின் உடலை தோண்டி எடுத்து மாந்திரீகம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இறந்த உடல்களை வைத்து மாந்திரீக சக்தியை அதிகரிக்க பூஜை செய்ததும், இதற்காக ஏராளமான மனித மண்டை ஓடுகளை பயன்படுத்தியதும் தெரிய வந்தது.
மந்திரவாதி கார்த்திகேயனுக்கு உடந்தையாக இருந்த மனைவி நசீமா, சென்னை ஈச்சம்பாக்கம் சவுரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த வினோத்குமார், சதிஷ், தன்ராஜ், மணிமாறன் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
மந்திரவாதி கார்த்திகேயன் பற்றி போலீஸ் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அவர் தங்கியிருந்த பெரம்பலூர் எம்.எம். நகர் அடுக்கு மாடி குடியிருப்பு வீடு மாதம் ரூ.20 ஆயிரம் வாடகை கொண்டதாகும்.
ரூ.20 ஆயிரம் வாடகை கொடுக்கும் அளவிற்கு மந்திரவாதி கார்த்திகேயன் பூஜை மூலம் சம்பாதித்துள்ளார். மேலும் அவரது வீட்டில் செக்ஸ் உணர்ச்சியை தூண்டும் கடல் குதிரைகள் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் மதிப்பு ரூ.7 லட்சம் ஆகும்.
மேலும் அவர் பயன்படுத்திய சொகுசு கார், விலையுயர்ந்த விநாயகர், காளி சிலைகள் ஆகியவையும் கைப்பற்றப்பட்டது. கார்த்திகேயன் 6-ம் வகுப்பு வரையே படித்துள்ளார். அவரது தாத்தாவிடம் மாந்திரீக தொழில் கற்றுள்ளார்.
கடந்த 7 வருடங்களாக மாந்திரீக தொழில் செய்து வந்துள்ளார். அவரிடம் முக்கிய பிரமுகர்கள் பலரும் அரசியல்வாதிகள் பலரும் சென்று குறி கேட்பது, ஜாதகம் பார்ப்பது என்று சென்று வந்துள்ளனர். மேலும் செக்ஸ் உணர்ச்சியை தூண்டும் கடல் குதிரைகள் போன்றவைகள், பெண்களை வசியப்படுத்தும் மை டப்பாக்கள், பில்லி, சூனிய தகடுகள், ஆகியவற்றையும் பயன்படுத்தியுள்ளார்.
இதன் மூலம் தன்னை நாடி வரும் பலரிடம் பல ஆயிரம் பெற்றுக்கொண்டு அவற்றை விற்று வந்துள்ளது தெரிய வந்தது.
இதன் மூலம் கோடிக்கணக்கில் சம்பாதித்துள்ளார். அந்த பணத்தில் கார், வீடு என வாங்கியுள்ளார். அவரின் சொத்து மதிப்பு பல கோடி இருக்கும் என கூறப்படுகிறது.
அவை எங்கெங்கு உள்ளன என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். மேலும் கார்த்திகேயன் மந்திரவாதியிடம் பழக்கமுள்ள நபர்கள் யார் என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.
கோடிக்கணக்கில் சொத்துக்களை குவித்த பெரம்பலூர் மந்திரவாதி- காமத்தை தூண்டும் மருந்துகள் கண்டுபிடிப்பு
Reviewed by மறத்தமிழன்
on
March 13, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
March 13, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.