Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

March 15, 2017

முத்துகிருஷ்ணன் உடல் இரவு சென்னை வருகிறது.. சென்னை டூ சேலம், தமிழக அரசு வாகன ஏற்பாடு


டெல்லி ஜெஎன்யுவில் உயிரிழந்த சேலத்தை சேர்ந்த மாணவர் முத்துக்கிருஷ்ணனின் உடல் இன்று இரவு சென்னை கொண்டு வரப்படுகிறது.

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் உயிரிழந்த தமிழக மாணவர் முத்துக்கிருஷ்ணனின் உடல் இன்று இரவு சென்னைக்கு கொண்டு வரப்படுகிறது. சென்னையில் இருந்து முத்துக்கிருஷ்ணனின் சொந்த ஊரான பெரியேரிக்கு அவரது உடல் கொண்டு செல்லப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஆய்வுப்படிப்பு படித்து வந்த மாணவர் முத்துக்கிருஷ்ணன். சேலம் மாவட்டம் பெரியேரி கிராமத்தைச் சேர்ந்த இவர் கடந்த திங்கட்கிழமை இரவு தனது நண்பரின் அறையில் தூக்கியில் தொங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.
முத்துக்கிருஷ்ணனின் மரணம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என அரசியல் கட்சிகள் வலியுறுத்தின.

இன்று பிரேத பரிசோதனை
முத்துக்கிருஷ்ணன் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறப்பட்டதைத் தொடர்ந்து அவரது உடல் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இன்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. எய்ம்ஸ் மருத்துவர்கள் 5 பேர் மற்றும் முத்துக்கிருஷ்ணனின் தந்தை தரப்பு மருத்துவரும் பிரேத பரிசோதனையில் ஈடுபட்டனர்.

கற்பித்தலில் உருமாற்றம்
கல்லூரி துணைமுதல்வர் திருமதி விசாலாட்சி அவர்கள் சிறப்புரை ஆற்றினார். முதல் நாள் பிற்பகல் மதுரை பாத்திமா கல்லூரி ஆங்கிலத்த இணைப் பேராசிரியர் முனைவர் சாகிரா பானு கற்பித்தலில் உருமாற்றம் பற்றி சிறப்பான முறையில் உரையாற்றினார்.

கற்பித்தலில் நீதிநெறி முறைகள்
இரண்டாம் நாளாக முதல் அமர்வில் லேடிடோக் கல்லூரி ஆங்கிலத்துறை இணைப்பேராசிரியர் முனைவர் சுகஜோசா 'கற்பித்தலில் நீதிநெறி முறைகள்' பற்றிய கருத்துக்களை விளக்கப் படங்கள் மூலமாக எடுத்துக்காட்டினார்.

கற்பித்தலின் அணுகுமுறைகள்
இரண்டாம் அமர்வில் திருச்சி மனிதவளம் மற்றும் சமூக அறிவியல்துறை துணை பேராசிரியர் முனைவர் வினோத் அவர்கள் கற்பித்தலின் அணுகு முறைகள் பற்றி விளக்கமாக எடுத்துக்கூறினார். நிறைவு விழாவில் திரு பெரிரா அவர்கள் இந்நிகழ்ச்சி தொடர்பான பொதுவான செய்திகளை எடுத்துக்கூறினார். இதில் கலந்து கொண்ட ஆசிரியப்பெருமக்களுக்கு பங்கேற்புச் சான்றிதழ் வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.