March 16, 2017
குஜராத்தில் பயங்கரம் : ஓடும்காரில் தந்தை கண்முன் மகள்களை பலாத்காரம் செய்த கும்பல்
குஜராத்தில் மகனை பழிவாங்குவதற்காக தந்தையுடன் இரண்டு மகள்களை கடத்திய கும்பல், தந்தை கண்முன்னாலேயே அந்த இருவரையும் பலாத்காரம் செய்துள்ளனர்.
குஜராத் மாநிலம் தாஹோத் மாவட்டத்தில் உள்ள பட்பாக்லா கிராமத்தைச் சேர்ந்த ஒருவர், அந்த கிராமத்தில் கடை வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு 13 மற்றும் 15 வயதுள்ள இரண்டு மகள்கள் மற்றும் மகன் உள்ளனர்.
இவரது மகன் மது வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்டார். அப்போது தனக்கு மது வழங்கியர் குமாத் பாரியா என்று போலீசாரிடம் கூறினார். இதனால் போலீசார் குமாத் பாரியா மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இதனால் குமாத் பாரியா பழிக்குப்பழி வாங்க நினைத்தார். இதனால் கடை நடத்தி வந்தவரின் இரண்டு மகள்களையும் குமாத் பாரியா 13 பேர் கொண்ட கும்பலுடன் ஒரு சொகுசு காரில் கடத்தினார். பின்னர் அந்த இளம்பெண்களின் தந்தையையும் கடத்தினார்கள்.
பின்னர் நான்கு பேர் இரண்டு மோட்டார் சைக்கிளில் பாதுகாப்பாக செல்ல சொகுசு காரில் இருந்த கும்பல், தந்தை முன் அந்த இரண்டு இளம் பெண்களையும் பாலாத்காரம் செய்துள்ளனர். அப்போது போலீசார் என்னைக் காட்டிக் கொடுத்தற்கு உன் மகனை பழிவாங்குவதற்காகத்தான் உன் மகளை பலாத்காரம் செய்தோம் என்று குமாத் பாரியா கூறியுள்ளார்.
பின்னர் அவர்களை மாந்தவ் கிராமத்தில் இறக்கிவிட்டு, போலீசாரிடம் இதுகுறித்து புகார் அளிக்கக்கூடாது என மிரட்டியுள்ளனர். இது குறித்து அந்த இளம்பெண்களின் தந்தை புகார் அளிக்க 13 பேரில் குமாத் பாரியா உள்பட ஐந்துபேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மேலும் இந்த சம்பத்தில் ஈடுபட்ட 8 பேரை போலீசார் தேடிவருகின்றனர்.
குஜராத்தில் பயங்கரம் : ஓடும்காரில் தந்தை கண்முன் மகள்களை பலாத்காரம் செய்த கும்பல்
Reviewed by மறத்தமிழன்
on
March 16, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
March 16, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.