March 26, 2017
நெடுவாசல் மக்களை ஏமாற்றிய மத்திய அரசு: ஹைட்ரோ கார்பன் திட்ட ஒப்பந்தத்தில் நாளை மத்திய அரசு கையெழுத்து
தமிழகத்தில் நெடுவாசல் உட்பட நாடு முழுவதும் 31 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க தனியார் மற்றும் பொதுத்துறை என 31 நிறுவனங்களுடனான ஒப்பந்தத்தில் நாளை மத்திய அரசு கையெழுத்திடுகிறது.
இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் மற்றும் ஆயில் இந்தியா லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் நடத்திய ஆய்வில் நாடு முழுவதிலும் நிலப்பகுதி மற்றும் கடல்பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் இருப்பது தெரியவந்தது. மேலும் இயற்கை எரிவாயு, மீத்தேன், தார், கச்சா எண்ணெய் உள்ளிட்ட பயனுள்ள பொருட்கள் இருப்பதாகத் தெரியவந்தது.
இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இந்த கனிம வளங்கள் இருப்பது கண்டறியப்பட்டாலும் அரசியல் மற்றும் பல்வேறு காரணங்களால் முந்தைய மத்திய அரசுகள் அவற்றை எடுப்பதற்கான திட்டத்தை முன்னெடுக்காமல் இருந்தன.
ஆனால், மோடி தலைமையிலான ஆட்சி அமைந்ததும் இயற்கை எரிவாயுக்களை எடுக்கும் திட்டத்தை தீவிரமாக செயல்படுத்த முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டது.
இதையடுத்து தமிழகத்தில் புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல், காரைக்கால் மற்றும் அசாமில் 9 இடங்கள், குஜராத்தில் 5 இடங்கள், ஆந்திராவில் 4, ராஜஸ்தானில் 2, மும்பை கடல்பகுதியில் 6, மத்தியப் பிரதேசம், கட்ச் கடல்பகுதி, கிருஷ்ணா-கோதாவரி நதிப்படுகை ஆகியவற்றில் தலா 1 என மொத்தம் 31 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நெடுவாசலில் தொடர் போராட்டங்கள் நடைபெற்றன. இதையடுத்து கடந்த 22-ம் தேதி நெடுவாசல் போராட்டக் குழு மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானைச் சந்தித்துப் பேசினர்.
இந்நிலையில், நாடு முழுவதும் தேர்வு செய்யப்பட்டுள்ள 31 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுடனான ஒப்பந்தம் நாளை கையெழுத்தாக உள்ளது.
எனினும் துரப்பன பணிகள் தொடங்குவதற்கு முன்பான இறுதி ஒப்பந்தம் இது இல்லை எனவும் சுற்றுச்சூழல், மாசுக்கட்டுப்பாடு உட்பட 30 வகையான அனுமதியை ஒப்பந்ததார நிறுவனங்கள் மாநில அரசிடம் பெற வேண்டும் எனவும் பெட்ரோலியத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நெடுவாசல் மக்களை ஏமாற்றிய மத்திய அரசு: ஹைட்ரோ கார்பன் திட்ட ஒப்பந்தத்தில் நாளை மத்திய அரசு கையெழுத்து
Reviewed by மறத்தமிழன்
on
March 26, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
March 26, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.