Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

March 10, 2017

இனி விதவைகளுக்குப் பெயர் ‘கல்யாணி’; மகளிர் தின விழாவில் பாஜக அதிரடி!!


மத்திய பிரதேச மாநிலத்தில் தற்போது ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் முதல்வராக சிவராஜ்சிங் சவுகான் உள்ளார். இவர், நேற்று நடந்த மகளிர் தின விழா ஒன்றில் கலந்துகொண்டு முதியோர், விதவைகள் ஆகியோருக்கான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

அப்போது அவர் பேசுகையில், மகளிருக்காக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. கணவனை இழந்த பெண்கள் அவர்களின் உறவினர்களாலும், சமுதாயத்தாலும் பெரும் புறக்கணிப்புக்கு உள்ளாகின்றனர்.

இந்த அவல நிலை போக்க, இனி விதவைகள் என்று அழைக்காமல் ‘கல்யாணி’ என்றே அழைக்கப்படுவர். மேலும், வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழ்பவர்களுக்கான ஓய்வூதிய திட்டத்திற்கு குடும்ப அட்டை கட்டாயமாக்கப்படாது என்றும் சிவராஜ்சிங் சவுகான் பேசினார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.