வரலாறு காணாத கடும் வறட்சி என எண்ணற்ற பிரச்னைகள் தலைதுாக்கியுள்ள நிலையில், மக்கள் வரிப்பணத்தில், தமிழக அமைச்சர்களுக்கு புதிய சொகுசு கார்கள் வாங்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் முன் எப்போதும் இல்லாத, கடும் வறட்சி நீடிக்கிறது. இதனால், 120 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். வாழ்வாதாரத்தை இழந்து விவசாயிகள் தவிக்கின்றனர்.ஒரு ஆண்டாக, விவசாயிகளுக்கு பயிர் கடன் கிடைக்கவில்லை. முடிவு காணாத நெடுவாசல் போராட்டம்; காவிரி நீர் உரிமையை பெற முடியாத நிலை; தலைவிரித்தாடும் குடிநீர் பஞ்சம் என தீர்க்க முடியாத பிரச்னைகள் ஏராளம். 'எது எக்கேடு கெட்டால் எங்களுக்கென்ன' என்பதை போல், அமைச்சர்களின் நடவடிக்கைகள் 'வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது' போல் உள்ளன.
அமைச்சர்கள் இரண்டு, மூன்று சொகுசு கார்களில், சுழல் விளக்குகளுடன் வலம் வருகின்றனர். மக்களை சந்திக்கும்போது, பிரச்னைகள் ஏற்படும் என்ற அச்சத்தில் பாதுகாப்புக்காக ஏராளமான போலீசாரையும் உடன் அழைத்து செல்கின்றனர். இந்த லட்சணத்தில் அமைச்சர்கள் 30 பேருக்கும் தலா ஒன்று வீதம் சொகுசு கார்கள், மக்கள் வரிப்பணத்தில் வாங்கப்பட்டுள்ளன. விழா நடத்தி கார்களை, விரைவில் வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.