Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

March 6, 2017

கள்ளக்காதல் பிரச்னையால் காவலர் குத்திக்கொலை!


பெண் காவலர் ஒருவருடன் மற்ற இரண்டு காவலர்களுக்கு ஏற்பட்ட கள்ளக்காதல் பிரச்னையால் இதில் சம்பந்தமே படாத மற்றொரு காவலர் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்.

திருவள்ளூர் ஆயுதப்படையில் பணியாற்றி வரும் சரண்யா என்பவர் தனது அக்கா மற்றும் தாத்தாவுடன் வசித்து வந்துள்ளார். சரண்யாவின் கணவர் ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் திருவள்ளூர் ஆயுதப்படையில் பணியாற்றும் கல்லணை என்பவருக்கும், சென்னை ஆயுதப்படையில் பணியாற்றும் அமிர்தராஜ் என்பவருக்கும் சரண்யாவுடன் கள்ளக்காதல் பழக்கம் இருந்துள்ளது.

சம்பவத்தன்று அமிர்தராஜ் சரண்டியா வீட்டிற்கு வந்துள்ளார். இதை அறிந்த கல்லணை தன்னுடன் பணியாற்றும் நண்பர்கள் சுந்தரபாண்டி, சந்திரன் மற்றும் சந்தானம் ஆகிய மூவருடன் சரண்யா வீட்டிற்கு வந்துள்ளார். அங்கு அமிர்தராஜூக்கும், கல்லணைக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு சண்டை வரவே, அமிர்தராஜ் தன்னிடம் இருந்த கத்தியை காட்டி அனைவரையும் கொன்றுவிடுவதாக மிரட்டியுள்ளார். அப்போது கல்லணை உடன் வந்தவர்கள் அமிர்தராஜை மடக்கி பிடிக்க முயன்ற போது சுந்தர பாண்டியனுக்கு கத்திக்குத்து விழுந்தது. இதில் சுந்தர பாண்டியன் சம்பவ இடத்திலேயே மயங்கி சரிந்தார். மேலும் சரண்யாவின் அக்காவுக்கும், தாத்தாவிற்கும் கத்தி குத்தி விழுந்தது

காவலர் சுந்தரபாண்டி சம்பவ இடத்தில் உயிரிழந்தார். அதன் பின்னர் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து சுந்தர பாண்டியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காயம் அடைந்த மற்றொரு காவலர் சந்திரன், சரண்யாவின் அக்கா மற்றும் தாத்தாவை மருத்துவ சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சரண்யா, அமிர்தராஜ், சந்தான குமார், கல்லணை ஆகியோரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.