March 27, 2017
ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு ஒப்பந்தம் போடும் மத்திய அரசு! மீண்டும் நெடுவாசல் போராட்டக்களமாகிறது......
ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு புதுக்கோட்டை மாவட்ட மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் அதை சட்டை செய்யாமல் இன்று அந்த திட்டத்துக்கு அனுமதி அளித்து ஒப்பந்தத்தில் மத்திய அரசு கையெழுத்திடுகிறது.
ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு தமிழகம் மற்றும் புதுவையில் எதிர்ப்புகள் உள்ள போதிலும் அதை கண்டுக் கொள்ளாமல் அந்த திட்டத்துக்கு அனுமதி அளித்து இன்று 27 பொதுத் துறை
நிறுவனங்களுடன் மத்திய அரசு ஒப்பந்தம் மேற்கொள்ளவுள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 31 இடங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அமல்படுத்தவுள்ளதாக மத்திய அரசு கடந்த மாதம் 14-ஆம் தேதி அறிவித்தது.
இந்த அறிவிப்பு வெளியான அடுத்த நாளே நெடுவாசல், நல்லாண்டார்கொல்லை, வடக்காடு உள்ளிட்ட 70 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தங்கள் பணிகளை விடுத்து இந்த போராட்டத்தில் முழு கவனம் செலுத்தி வந்தனர். இந்நிலையில் தமிழக அரசும், மாவட்ட நிர்வாக அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தியதால் இந்த போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது.
தமிழிசை, பொன்னார்
மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எந்த ஒரு திட்டத்தையும் மத்திய அரசு மேற்கொள்ளாது என்று தமிழிசை சௌந்தரராஜனும், பொன்.ராதாகிருஷ்ணனும் உறுதி அளித்தனர். அதேபோல் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் விவசாயத்தை அழித்து செயல்படுத்தும் எந்த ஒரு திட்டமும் அனுமதிக்கப்படாது என்றார்.
உறுதியான நாராயணசாமி
தமிழகத்தில் போராட்டம் தீவிரமடைந்தும் கண்டுகொள்ளாமல் இருந்ததாக பல்வேறு விமர்சனங்களுக்காளான பின்னரே முதல்வர் எடப்பாடி இந்த விஷயத்தில் கவனம் செலுத்தினார். ஆனால் புதுவை முதல்வர் நாராயணசாமியோ ஆரம்ப கால முதலே இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வந்தார்.
31 இடங்களில்..
தமிழகம் மற்றும் புதுவை ஆகிய மாநிலங்களில் மொத்தம் 31 இடங்களில் இந்த ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எடுக்க மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. ஆயினும் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் முக்கனிகள் விளையும் பூமியான நெடுவாசலில் விவசாயம் பாதிக்கப்படும், குடிநீர் ஆதாரம் பாதிக்கப்படும் என்று மக்கள் இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இன்று கையெழுத்து
இந்நிலையில் மக்களின் எதிர்ப்பை மீறி 31 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எரிவாயுவை எடுக்க 27 பொதுத் துறை நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கும் ஒப்பந்தம் இன்று அவசர அவசரமாக கையெழுத்தாகவுள்ளது. தமிழகம் மற்றும் காரைக்காலில் ஜெம் நிறுவனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஒப்பந்தம் கையெழுத்தானவுடன் அந்த நிறுவனங்கள் சுற்றுச்சூழல், மாசுக்கட்டுப்பாடு என 30 வகையான அனுமதிகளை பெற வேண்டியது அவசியம்.
மக்கள் சொல்வது என்ன
மத்திய பெட்ரோலியத் துறை இணை அமைச்சர் தர்மேந்திர பிரதான் முன்பு கையெழுத்தாக உள்ள நிலையில் மத்திய அரசின் இந்த செயலுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து நெடுவாசல் போராட்டக் குழுவினர் தெரிவிக்கையில் இந்த திட்டத்தை செயல்படுத்தினால் எங்கள் போராட்டம் தீவிரமடையும். 70 கிராமங்களில் உள்ள மக்களின் உயிரே போனாலும் இந்த திட்டத்தை செயல்படுத்த விடமாட்டோம். 30 வகையான அனுமதிகளை பெற வேண்டியிருப்பதால் இந்த திட்டம் எப்படியும் தோல்வியுறும் என்று நம்புகிறோம் என்று அவர்கள் தெரிவித்தனர்.
ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு ஒப்பந்தம் போடும் மத்திய அரசு! மீண்டும் நெடுவாசல் போராட்டக்களமாகிறது......
Reviewed by மறத்தமிழன்
on
March 27, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
March 27, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)




No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.