March 12, 2017
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தே.மு.தி.க. தனித்துப்போட்டி
சென்னை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வருகின்ற ஏப்ரல் 12-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் வருகின்ற 23-ம் தேதி துவங்குகிறது. இந்தத் தேர்தலில் சசிகலா மற்றும் ஓ.பி.எஸ் அணியில் இருந்து அதிமுக சார்பில் போட்டியிடுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. இதற்கிடையே திமுகவுக்கு ஆதரவு அளிப்போம் என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது. மேலும், பா.ஜ.க. மற்றும் மக்கள் நலக் கூட்டணியினர் தனித்தனியாக போட்டியிடுவதாக அக்கட்சியினர் அறிவித்துள்ளனர்.
இந்நிலையில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தே.மு.தி.க. தனித்துப் போட்டியிடும் என அக்கட்சி தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார். மேலும், அக்கட்சி சார்பில் வடசென்னை மாவட்ட செயலாளர் மதிவாணன் தேர்தலில் போட்டியிடுவார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தே.மு.தி.க. தனித்துப்போட்டி
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
March 12, 2017
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
March 12, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)



No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.