March 19, 2017
பட்டினியோடு போராடிய விவசாயிகள்! பசி தீர்த்த இளைஞர்கள்! தமிழன்டா!
தமிழகத்தில் கடந்த சில வருடங்களாக பருவமழை பொய்த்ததால் கடும் வறட்சி ஏற்பட்டது. இதனால் நீர்நிலைகள் எல்லாம் வற்றி போனது. விவசாயம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் தமிழக விவசாயிகள் பயிர்க்கடன்களை செலுத்த முடியாமல் தற்கொலை செய்து கொண்டனர். இந்த துயர சம்பவம் டெல்டா மாவட்டங்களில் தொடர்ந்து நடந்து வருகிறது.
இதனையடுத்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், வறட்சி நிவாரணம் கோரியும் தமிழகம் முழுவதும் விவசாயிகள் பல்வேறு இடங்களில் போராட்டங்களில் ஈடுப்பட்டனர்.
இந்நிலையில் தமிழகத்தை விவசாயிகள் சங்கங்கள், தமிழக நதிநீர் இணைப்பு விவசாயிகள் நல சங்கத்தை சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் கடந்த 4 நாட்களாக நடு ரோட்டில் கொட்டும் பனியிலும், அடிக்கும் வெயிலும், அரை நிர்வாண கோலத்திலும், நாமம் பூசிக்கொண்டும் விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் டெல்லியை சேர்ந்த தமிழ் இளைஞர்கள், பசி, பட்டினியோடு போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக விவசாயிகளுக்கு உணவு சமைத்து கொண்டு வந்து அன்போடு பரிமாறினர்.
தமிழக இளைஞர்களின் இத்தகைய செயல், போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகளை நெகிழ செய்திருக்கிறது.
பட்டினியோடு போராடிய விவசாயிகள்! பசி தீர்த்த இளைஞர்கள்! தமிழன்டா!
Reviewed by மறத்தமிழன்
on
March 19, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
March 19, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.