Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

March 5, 2017

அரசியலுக்கு வருகிறார் நடிகர் கமல்? ரசிகர்கள், வழக்கறிஞர்களுடன் இன்று முக்கிய ஆலோசனை!


சென்னை: நடிகர் கமல்ஹாசன் திடீரென ரசிகர் மன்ற நிர்வாகிகள், வழக்கறிஞர்களை ஆலோசனைக்கு அழைப்பு விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமது அரசியல் பிரவேசத்தை நடிகர் கமல்ஹாசன் அறிவிக்கக் கூடும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் நடிகர் கமல்ஹாசன் சமூக வலைதளங்கள் மூலமாக பல்வேறு கருத்துகளை வெளியிட்டு வருகிறார். ஜல்லிக்கட்டு தொடங்கி நெடுவாசல் வரை அனைத்து பிரச்சனைகளிலும் தமது கருத்துகளை தொடர்ந்து ஃபேஸ்புக், ட்விட்டர் பக்கங்களில் வெளியிட்டு வருகிறார் கமல்ஹாசன்.
ஜல்லிக்கட்டு பிரச்சனையில் கமல்ஹாசனின் ரசிகர் சுதாகர் என்பவரை போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர்.இதற்கும் கண்டனம் தெரிவித்திருந்தார் கமல். அண்மைக்காலமாக கமல்ஹாசன் அரசியலுக்கு வர வேண்டும் என பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

ஆனால் தமக்கு அரசியல் சரிப்பட்டு வராது என கமல் தொடர்ந்து கூறி வருகிறார். அத்துடன் கமல்ஹாசன் அரசியலுக்கு வருவதை தாம் எதிர்ப்பதாக பாஜக ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமியும் கூறியிருந்தார்.
இந்த நிலையில் இன்று திடீரென தமது ரசிகர் மன்ற நிர்வாகிகள், வழக்கறிஞர்களுடன் கமல்ஹாசன் ஆலோசனை நடத்த உள்ளார். இதனால் கமல்ஹாசன் அரசியல்பிரவேசத்தை அறிவிப்பாரா? என்கிற பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.