Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

March 16, 2017

சென்னையில் டாக்டர்கள் அராஜகம்! ரவுடிகளை போல் அத்துமீறல்! நோயாளிகள் உயிருக்கு போராட்டம்!


சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அடிப்படை வசதிகள் பல நிறைவேற்றப்படாமல் உள்ளன. மருத்துவர்களுக்கும் சில பிரச்சனைகள் உள்ளன.

அதே நேரம் சிகிச்சைக்கு வரும் ஏழை, எளிய மக்களை அடிமைகளாக மருத்துவர்கள் நடத்துவதாக தொடர்ந்து புகார்கள் இருந்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று ஒரு மருத்துவர் ரவுடியாக மாறி, செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்.

அதுமட்டுமின்றி, நல்லவர்கள் போல் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் ஒரு நோயாளி சிகிச்சையின்றி உயிரிழந்தார்.

பல நோயாளிகள் உயிருக்கு போராடி வருகின்றனர். மருத்துவர்கள் அனைவரும் இந்த போராட்டத்தில் பங்கேற்றது மட்டுமின்றி, மருத்துவ மாணவர்களையும் அழைத்து வந்து சாலையில் அமர வைத்துள்ளனர்.

இதனை காவல்துறையினர் வேடிக்கை பார்த்து வருகின்றனர். செய்தியாளரை தாக்கிய மருத்துவர், ஏண்டா, நாங்க எங்க கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடத்தினா போட மட்டா, நோயாளிக்கு பிரச்சனைனா மட்டும் வருவியா என கேட்டுள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.