Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

March 6, 2017

தமிழக அரசியல் வெற்றிடத்தை நிரப்ப நடிகர் கமல் முடிவு!? அஸ்திவாரம் போட்டாச்சு?!


ஜெ.,மரணத்திற்கு பிறகு நடிகர் கமல் பல்வேறு அரசியல் கருத்துகளை தெரிவித்து வருகிறார். இது அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது.
இந்நிலையில், தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்ப உங்களால் மட்டுமே முடியும் என அவரது ரசிகர்கள் அவரிடம் கோரி வருகின்றனர். அதையடுத்து, சென்னை ஆழ்வார்பேட்டையில் தனது அலுவலகத்தில், ரசிகர் மன்ற நிர்வாகிகள் மற்றும் வக்கீல்களுடன், கமல் ஆலோசனை செய்தார்.
ஆலோசனையின் போது, கமல் பேசியதாக அவரது ரசிகர்கள் கூறியதாவது, கச்சேரியில் பாட்டு சரி இல்லை என குறை கூறுவதால், மேடைக்கு வந்து என்னை பாடச் சொல்ல கூடாது.
நான் அறிக்கை விடுவது புதிதல்ல, 30 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே, கருத்து கூறி வருகிறேன். இலங்கை பிரச்சனையில் முதலில் குரல் கொடுத்தது நான் தான்.
நான் அரசியலில் இல்லை என்று யார் சொன்னது. நான் செய்யும் அரசியல், ஒட்டு வாங்கும் அரசியல் அல்ல.
மக்கள் பிரச்சனைகளை தீர்க்கும் அரசியல். யார் தவறு செய்தாலும் அவர்களுக்கு நாகரீக முறையில் கண்டனத்தை பதிவு செய்யுங்கள். 30 ஆண்டுகளாக எந்த வித இடையூறு இல்லாமல் நடந்த வந்த ரசிகர் மன்ற பணிகள் மேலும் பெரிய அளவில் நடைபெற நான் துணை இருப்பேன், என்று கமல் பேசியதாக  கூறினார்.
மேலும் சில நிர்வாகிகள் கூறுகையில்,ஜெ.,மறைவின் போது ‘சார்ந்தோருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்’ என, கமல் கூறினார்.
இது, எவ்வளவு உண்மை என, இப்போது தெரிந்திருக்கும் கமலின் இந்த அதிரடி நடவடிக்கை, அவர் அரசியலுக்கு வருவதற்கான அஸ்திவாரம் தான். என்றும் அவர் அரசியலுக்கு வந்தால் ரசிகர்கள் உற்சாகம் அடைவார்கள், என்றனர்

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.