March 13, 2017
தமிழகத்தில் புதிதாக தேர்தல் நடைபெற வேண்டும் நடிகர் கமல்ஹாசன் கூறுகிறார்
நடிகர் கம்ல்ஹாசன் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது:-
நாட்டில் தவறுகள் அதிகரிக்கும் போது மக்களிடம் கொந்தளிப்பு ஏற்படும்.. அரசியல் அநீதிகளுக்கு ஏதிராக குரல் கொடுப்பேன்.எளிமையான அணுகுமுறையுடன் கூடிய தலைவர்கள் தற்போது தேவை படுகிறார்கள்.
அரசியல் வர்த்தகமாகிவிட்டது. காலத்தின் தேவைக்கு ஏற்ப அரசியல் இயக்கங்கள் மாற வேண்டும். அரசியல் பேசுவதற்கு குடிமகன் என்பது எனது முதல் தகுதி .
மக்களுக்காக பழைய சட்டங்களை நீக்கிவிட்டு புதிய சட்டங்களை இயற்ற வேண்டும். எனக்கு தலைவர்கள் யாரும் கிடையாது; காந்தி, பெரியார் மாதிரியான ஹீரோக்கள் தான் உள்ளனர் என்றார். ஏனென்றால் காந்தி, பெரியார் இருவரும் தேர்தல் அரசியல் நடத்தவில்லை.
கொள்கை நேரத்துக்கு நேரம் மாறுபடும். மக்களுக்கு தேவையான அரசியலே தேவை. அந்த அரசியல் காலத்துக்கு காலம் மாறுபடும். காலத்தின் தேவையாக இருந்ததால் தான் திமுக அதிமுக இயக்கங்கள் உருவெருத்தது.
நாட்டு நடப்பு குறித்து பேசினால், நாட்டை விட்டு போகிறேன் என்று சொன்னவர் நாட்டின் பிரச்சனை குறித்து பேசுகிறார் என்கின்றனர். நாட்டை விட்டு நான் வெளியேறினால் அது இந்த அரசுக்கு அவமானம் இல்லையா?
விஸ்வரூபம் படத்திற்கு வந்த பிரச்சனைகள் எல்லோருக்கும் தெரியும். அதன் பின் அரசியலை தவிர வேறு ஏதும் காரணமல்ல.இஸ்லாமியர்கள் அந்தப் பிரச்சனைக்கு காரணமல்ல. எனக்கு நிறைய இஸ்லாமிய நண்பர்கள் இருக்கின்றனர்.
நிகழ்கால அரசியலுக்கு எதிராக தான் குரல் கொடுப்பேன்.சினிமாவை பலரும் விமர்சனம் செய்வது போல தான் அரசியலை விமர்சனம் மட்டுமே செய்வதாக கூறினார். அதற்காக தன்னை அரசியலுக்கு வரச்சொல்வது ஏன் ? இவ்வாறு அவர் கூறினார்
சிவப்பு சட்டை அணிந்திருப்பதால் மட்டுமே தான் கம்யூனிஸ்ட் ஆகிவிட முடியாது என்றும் கூறினார். தமிழகத்தில் தலைமை பொறுப்புக்கு தகுதியான ஆட்கள் வேண்டும்.தமிழகத்தில் மேலும் 4 ஆண்டுகள் ஆட்சி தொடரவேண்டும் என்று யாரும் கட்டாயப்படுத்தவில்லை என்றார். நான் பேசினால் மக்களை சென்றடையும் என்பதால் பேசுகிறேன் என்றும் கூறினார். சட்டத்தைக் காரணம் காட்டி கட்டாய திருமணம் போல 4 ஆண்டுகள் ஏன் ஆட்சியைத் தொடரவேண்டும் என்று கேள்வி எழுப்பினார்.
புதிதாக தேர்தல் நடைபெற வேண்டும் என்றும் தங்களுக்குத் தேவையான தலைவரை மக்களே தேர்வு செய்யவேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்
தமிழகத்தில் புதிதாக தேர்தல் நடைபெற வேண்டும் நடிகர் கமல்ஹாசன் கூறுகிறார்
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
March 13, 2017
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
March 13, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.