Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

March 7, 2017

இந்தியாவுடன் சிரித்துக் கொண்டே கைலுக்கி தமிழக மீனவரை படுகொலை செய்த சிங்கள சிறிசேனா!


ராமேஸ்வரம்: எங்கள் நட்புநாடு என இந்திய தலைவர்களுடன் சிரித்தபடியே கைகுலுக்கிக் கொள்ளும் சிங்கள சிறிசேனாதான் இப்போது அப்பாவி தமிழக மீனவரின் உயிரை கோரமாக குடித்திருக்கிற கொடூரத்தை நிகழ்த்தியுள்ளார். சிறிசேன இலங்கை அதிபரான பின்னர் நடந்தேறிய முதலாவது தமிழக மீனவர் படுகொலை இது.
இலங்கை அதிபர்களாக இருந்த ஜெயவர்த்தனே, சந்திரிகா குமராதுங்க, ராஜபக்சே ஆட்சிக் காலங்களில் விடுதலைப் புலிகளுக்கு உடந்தை என காரணம் காட்டி நூற்றுக்கணக்கான தமிழக மீனவர்கள் படுகொலை செய்யபப்ட்டனர். இதுவரை 800-க்கும் அதிகமான மீனவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
2009-ம் ஆண்டு விடுதலைப் புலிகளின் அத்தியாயம் முடிவுக்கு வந்த பின்னரும் இந்த கொடூரம் தொடர்ந்தது. 2011-ம் ஆண்டு சிங்கள கடற்படை நடத்திய கொடூர தாக்குதலில் காரைக்காலை சேர்ந்த 4 மீனவர்கள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டனர்.


இலங்கையில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்து சிறிசேன அதிபரானார். ஆனாலும் தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல்கள் ஓய்ந்ததாக இல்லை.


இதுவரை இல்லாத வகையில் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரமான படகுகளை கைப்பற்றி சிறைபிடித்து வைக்கும் நடைமுறையை சிறிசேன அரசு கடைபிடித்தது. இது தமிழக மீனவர்களின் பொருளாதாரத்தின் மீதான நேரடித் தாக்குதல்.


ஆனால் இந்திய மத்திய அரசோ இதுவரை சிங்கள சிறிசேன அரசை தட்டிக் கேட்காமல் நட்பு நாடு எனக் கூறிக் கொண்டு பல ஆயிரம் கோடி ரூபாய் நிதி, ஆயுத உதவி வழங்குகிறது. இப்போது இந்தியா கொடுத்த ஆயுதங்களைக் கொண்டே இந்திய குடிமகனாகிய மீனவரை சுட்டுப் படுகொலை செய்திருக்கிறது சிங்கள சிறிசேன.


ஒருபுறம் இந்தியாவுடன் சிரித்துக் கொண்டே கை குலுக்கிய சிங்கள சிறிசேனா இதோ இப்போது தமிழக மீனவரின் உயிரை குடித்திருக்கிறார்... இந்திய மத்திய பேரரசு என்னதான் செய்யப் போகிறது?

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.