Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

March 12, 2017

இன்றே தெரிந்து விடும், ஆட்சி மன்றக்குழுவில் இன்னாரென்று..!! “இரட்டை இலை நமதே”-ஓ.பி.எஸ் உறுதி..!!


சசிகலாவை எதிர்த்து வெளியே வந்து சந்திக்கும் முதல் தேர்தல் என்பதால், இந்த தேர்தலில் போட்டியிட்டு தங்கள் பலத்தை காட்டுவதில் ஓபிஎஸ் அணியினர் மும்முரமாக இருந்து வருகின்றனர்.
அது மட்டுமல்லாமல் இரட்டை இலை சின்னத்தில் தான் இந்த இடைத் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்பதிலும் ஓ.பி.எஸ். அணி உறுதியாக இருந்து வருகிறது.
இதற்காக இரட்டை இலை சின்னத்தை கைப்பற்றும் முயற்சியும் தீவிரமாக நடந்து வருகிறது. இதற்காக தேர்தல் ஆணையத்தை அணுகி பல்வேறு ஆவணங்களை அளித்து வருகிறது.
முதல் கட்டமாக தற்காலிக பொது செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டது செல்லாது. அதிமுகவின் அடிமட்ட உறுப்பினர்கள் தான் பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற தங்களின் பக்கம் உள்ள நியாயத்தை தேர்தல் ஆணைய அதிகாரிகளை நேரில் சந்தித்து ஓ.பி.எஸ். அணியினர் தெளிவுப்படுத்தி உள்ளனர்.
அது மட்டுமல்லாமல் விரைவில் பொதுச் செயலாளர் தேர்தலை நடத்தவும் ஓபிஎஸ் அணியினர் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். அதன் பின்னர் அதிமுக தலைமை அலுவலகத்தை கைப்பற்றவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
இது ஒரு புறம் இருக்க ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடுவது குறித்தும், வேட்பாளரை அறிவிக்கவும் ஓபிஎஸ். அணியினர் ஆட்சி மன்றக்குழு பெயர் பட்டியலை இன்று வெளியிட உள்ளனர்.
அதைத் தொடர்ந்து ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட விரும்புகிறவர்களிடம் இருந்து விருப்ப மனுக்களை திங்கள், செவ்வாய் கிழமைகளில் வாங்கவும் ஓ.பி.எஸ். அணியினர் திட்டமிட்டுள்ளனர்.
அதன் பிறகு விருப்பம் தெரிவித்தவர்களிடம் ஆட்சி மன்றக்குழுவினர் மூலம் நேர்காணல் நடத்தப்படும். இறுதியாக வருகிற 15ம் தேதி ஆட்சி மன்றக்குழு வேட்பாளர் பெயரை அறிவிக்கும் என்றும் ஓ.பி.எஸ். அணியினர் கூறி வருகின்றனர்.
தொண்டர்கள் செல்வாக்கு சசிகலா அணியை விட, ஓ.பி.எஸ். அணிக்கு தான் அதிகமாக உள்ளதால் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட ஏராளமானோர் விருப்ப மனுக்களை அளிப்பார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.