Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

March 13, 2017

மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு, மகளை அடித்துக் கொன்ற தந்தை


ஹைதராபாத்: ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் 3 வயது சிறுமியை தந்தையே அடித்துக் கொன்ற கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் வீட்டு வேலை செய்து வரும் சுரேஷ் மற்றும் ஜோதி தம்பதிகள் அப்பகுதியில் உள்ள பணியாளர் குடியிருப்பில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 3 வயதில் கீர்த்தி எனும் மகள் இருக்கிறாள்


இந்நிலையில், மனைவி ஜோதி கள்ளக்காதல் வைத்திருப்பதாக சந்தேகப்படும் சுரேஷ் தினசரி ஜோதியை அடித்து கொடுமைப்படுத்தி வந்துள்ளார். இதனால், கீர்த்தி தனக்கு பிறந்த மகள் இல்லை என பலமுறை சொல்லி வந்த சுரேஷ், ஆத்திரத்தின் உச்சத்தில் ஜோதியையும், மகள் கீர்த்தியையும் அடித்து உதைத்துள்ளார். இதில் மயங்கி விழுந்த சிறுமி கீர்த்தி சுமார் 2 மணி நேரத்திற்கு கண்விழிக்கவே இல்லை.

இதைத் தொடர்ந்து ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சிறுமி இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, மருத்துவமனை தரப்பில் இருந்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

இதைத் தொடர்ந்து சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தாய் ஜோதி அளித்த புகாரின் அடிப்படையில் சுரேஷ் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சுரேஷ் தற்போது காவல்துறையின் கஸ்டடியில் இருக்கிறார். இவர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படுவார் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.