Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

March 28, 2017

முக்குலத்தோர் புலிப்படையில் ’ இருந்து கருணாஸ் அதிரடி நீக்கம்


‘முக்குலத்தோர் புலிப்படை’ கட்சியின் தலைவராக இருந்த நடிகர் கருணாஸ் அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இவருக்கு பதிலாக துணைத்தலைவர் சந்தனகுமார், தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஆண்டு நடந்துமுடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில், திருவாடானை தொகுதியில், அ.தி.மு.க. சார்பாக இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றார் கருணாஸ். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க. எம்எல்ஏ கருணாஸ், சசிகலா அணியில் இணைந்தார்.

இந்நிலையில், ‘முக்குலத்தோர் புலிப்படை’ கட்சியின் அனைத்து புதிய நிர்வாகிகளையும் கருணாஸ் இன்று அதிரடியாக நீக்கினார். நிர்வாகிகளாக இருந்தவர்கள், அதிகாரபூர்வ அனுமதி கடிதம் இன்றி செயல்பட்டவர்கள் என்று கூறியுள்ள கருணாஸ், மாவட்ட, ஒன்றிய, நகர புதிய நிர்வாகிகள் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என்று தெரிவித்தார்.

இந்நிலையில் ‘முக்குலத்தோர் புலிப்படை’ கட்சியில் இருந்து நடிகர் கருணாஸ் நீக்கப்பட்டதாக பொதுச்செயலாளர் பாண்டித்துரை மற்றும் துணைத்தலைவர் சந்தனகுமார் ஆகியோர் கூட்டாக மதுரையில் அறிவிப்பு வெளியிட்டனர்.
புதிய தலைவராக சந்தனகுமாரை நியமித்து செயற்குழு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.