Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

March 30, 2017

போராட்டம் நடத்தும் மாணவர்களை கைது செய்தால் தீக்குளிப்போம்.. விவசாயிகள் எச்சரிக்கை


தமிழகத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தும் மாணவர்களை கைது செய்தால் தீக்குளிப்போம் என டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் விவசாயிகள் எச்சரித்துள்ளனர்.

தமிழகத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தும் மாணவர்களை கைது செய்வதற்கு டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தங்களுக்கு ஆதரவாக போராடும் மாணவர்களை கைது செய்தால் தீக்குளிப்போம் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

டெல்லியில் அய்யாக்கண்ணு தலைமையிலான விவாசயிகளின் போராட்டம் இன்றும் 17வது நாளாக நீடிக்கிறது. கடும் வெயிளிலும் குளிரிலும் போராடும் தமிழக விவசாயிகளுக்கு வட மாநில விவசாயிகளும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

அரசியல் கட்சியினர் பலரும் தினமும் விவசாயிகளை சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர். தமிழகத்திலும் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
சென்னை மெரினா, கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட இடங்களில் நேற்று விவசாயிகளுக்கு ஆதரவாக கல்லூரி மாணவ, மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கிச்சென்று கைது செய்தனர்.

இந்நிலையில் விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தும் மாணவர்களை காவல்துறை கைது செய்வதற்கு டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் எதிர்ப்பு

தெரிவித்துள்ளனர். தங்களுக்கு ஆதரவாக போராடும் மாணவர்கள் மீது போலீசார் கை வைத்தாலோ அல்லது கைது செய்தாலோ தீக்குளிப்போம் என்றும் விவசாயிகள் எச்சரித்துள்ளனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.