Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

March 28, 2017

விமான ஊழியரை செருப்பால் அடித்த எம்.பி! பதிலடி கொடுத்த ஏர் இந்தியா நிறுவனம்!


கடந்த 23ம் தேதி மும்பை புனே ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்த சிவசேனா எம்.பி., ரவீந்திர கெய்க்வாட் இருக்கை பிரச்சனை தொடர்பாக விமான ஊழியரை செருப்பால் அடித்தார்.

எம்.பி.யின் இந்த அநாகரிக செயலுக்கு நாடு முழுவதும் கண்டனம் எழுந்தது. மேலும் எம்.பி.யின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து விமான நிறுவனங்கள், அவர் விமான பயணத்திற்கு தடை விதித்தன.

இதுசம்பந்தமாக டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் எம்.பி. ரவீந்திர கெய்க்வாட் பயணம் செய்யும் வகையில் விமான பாதுகாப்பு விதிகளை திருத்தம் செய்ய மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் மும்பையில் இருந்து டெல்லி செல்லும் ஏர் இந்தியா விமானத்தில் எம்.பி. கெய்க்வாட் டிக்கெட் புக் செய்து இருந்தார். ஆனால் ஏர் இந்தியா நிறுவனம் அவரது விமான டிக்கெட்டை ரத்து செய்துள்ளது.

ஒரே வாரத்தில் இரண்டு முறை எம்.பி. கெய்க்வாட்டின் டிக்கெட்டை ஏர் இந்தியா நிறுவனம் ரத்து செய்துள்ளது.

எம்.பி செயலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக விமான நிறுவனத்தில் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.