March 29, 2017
சென்னை மெரினாவில் குழுகுழுவாக திரளும் மாணவர்கள்... நூதன முறையில் தொடரும் போராட்டத்தால் பதற்றம்!
சென்னை மெரினா கடற்கரை சாலையில் அமர்ந்து 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
மெரினா கடற்கரையில் குழுக்களாக மாணவர்கள் அடுத்தடுத்து திரண்டு வருகின்றனர். 20க்கும் மேற்பட்ட இளைஞர்கள் திடீரென விவேகானந்தர் இல்லம் அருகே சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பதற்றம் ஏற்பட்டது.
ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ள நிலையிலும் இளைஞர்கள் அணி அணியாக மெரினாவுக்கு திரண்டு வருகின்றனர். அவர்கள் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்க ஒப்புதல் அளித்த மத்திய அரசைக் கண்டித்தும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் முழக்கமிட்டனர்.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கிச்சென்று கைது செய்தனர். மெரினாவில் தொடரும் போராட்டத்தால் அப்பகுதியில் பதற்றம் நீடிக்கிறது.
சென்னை மெரினாவில் குழுகுழுவாக திரளும் மாணவர்கள்... நூதன முறையில் தொடரும் போராட்டத்தால் பதற்றம்!
Reviewed by மறத்தமிழன்
on
March 29, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
March 29, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.