March 3, 2017
ராணுவத்திலுள்ள குறைகளைப் பேசிய வீரர் மரணம்
ராணுவ முகாம்களில் உயரதிகாரிகள் கொடுமை செய்வதாகவும், பணியிடத்தில் போதிய வசதிகள் அளிக்கப்படவில்லை என்றும் புகார் கூறிய ராணுவ வீரர், மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்த ராய் மாத்யூ (33), மகாராஷ்ட்ரா மாநிலம் நாசிக் ராணுவ முகாமில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில், மராத்தி மொழியிலான உள்ளூர் தொலைக்காட்சி ஒன்றிற்கு அவர் பேட்டியளித்துள்ளார். அதில், ராணுவ முகாம்களில் நடக்கும் துன்புறுத்தல்கள் பற்றியும், ராணுவ உயரதிகாரிகள் தங்களுக்கு கீழ் உள்ள வீரர்களுக்கு தரும் தொல்லைகள் குறித்தும் பேட்டியளித்துள்ளார். அவர் அளித்த பேட்டியை கடந்த திங்கட்கிழமையன்று, உள்ளூர் தொலைக்காட்சி மாத்யூவின் முகத்தை மறைக்காமல், அப்படியே அதனை ஒளிபரப்பு செய்துள்ளது. இந்நிலையில், ராணுவ வீரரான மாத்யூ தற்கொலை செய்துகொண்டதாக, அவரது குடும்பத்தினருக்கு ராணுவத் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பேசிய மாத்யூவின் சகோதரர் ஜான் மாத்யூ, “ராய் மாத்யூ சடலமானநிலையில் மீட்கப்பட்டுள்ளதாகவும், அவரின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் ராணுவ அதிகாரி போனில் தெரிவித்ததாகக் கூறினார். இது குறித்து மாத்யூவின் மனைவி, தனது கணவர் மரணத்தில், நீதி கிடைக்க வேண்டும் என அம்மாநில முதல்வர் பினராயி விஜயனிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
ராணுவத்திலுள்ள குறைகளைப் பேசிய வீரர் மரணம்
Reviewed by மறத்தமிழன்
on
March 03, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
March 03, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.