Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

March 20, 2017

சிறையில் "சுயசரிதை" எழுதும் சசிகலா... அங்கேயும் தொடரும் தியானம்!


பெங்களூரு சிறையில் சசிகலா சுயசரிதை எழுதி வருகிறாராம். சிறைக்குள்ளேயும் கூட தமது பாணி 'தியானத்தை' தொடருகிறாராம் சசிகலா.

பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா சுயசரிதை எழுதும் முயற்சியில் ஈடுபட்டுள்ளாராம். அத்துடன் சிறைக்கு உள்ளேயும் தியானத்தை தொடர்ந்து மேற்கொள்கிறாராம் சசிகலா.
ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் சசிகலா அரசியலில் குதித்தார். ஜெயலலிதாவைப் போல நடை உடை சிகை அலங்காரம் செய்து கொண்டார். ஆனால் இதை தமிழக மக்கள் எவருமே ஏற்றுக் கொள்ளவில்லை.

இதைப்பற்றியெல்லாம் கவலைப்படாத சசிகலா அதிமுக பொதுச்செயலராகி முதல்வர் நாற்காலியில் அமரவும் முயற்சித்தார். ஆனால் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் உச்சநீதிமன்றம் சிறை தண்டனையை உறுதி செய்ததால் முதல்வர் பதவி கனவு தவிடுபொடியானது.

ஜெ. கல்லறை சபதம்
சென்னையில் இருந்து பெங்களூரு சிறைக்கு சசிகலா போன நாளில் அவர் அரங்கேற்றிய நாடகங்கள் ஏராளம்.. ஜெயலலிதா நினைவிடத்துக்குப் போய் மூன்று முறை ஓங்கி அடித்து கர்ண கொடூரமாக சபதமெல்லாம் எடுத்தார்.

எம்ஜிஆர் இல்லத்தில் தியானம்
அப்படியே திடீரென எம்ஜிஆர் வாழ்ந்த ராமாவரம் இல்லத்துக்குப் போய் தியானத்தில் ஈடுபட்டார். பெங்களூரு சிறைவாசலில் கணவர் நடராஜனை கட்டிப்பிடித்து கதறி அழுதார்.

அங்கேயும் தியானம்
சிறைக்குள் போன சசிகலா தினமும் அதிகாலையிலேயே எழுந்துவிடுகிறாராம். அப்படியே ஒரு வாக்கிங் போய் அங்கேயும் தியானத்தை தொடர்கிறாராம்.

  சுயசரிதை
அதன் பின்னர் ஜெயில் மேட் இளவரசியுடன் அமர்ந்து பழைய சம்பவங்கள், நிகழ்வுகளை பேப்பரில் எழுதுகிறாராம். இவை எல்லாவற்றையும் தொகுத்து சுயசரிதை ஒன்றை வெளியிடும் முடிவில் இருக்கிறாராம் சசிகலா.

அடுத்து லேப்டாப்
நாட்டை உலுக்கிய ஷீனா போரா கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான பீட்டர் முகர்ஜி சிறையில் தம்முடைய சுயசரிதை எழுத லேப்டாப் வேண்டும் என கேட்டிருந்தார். அதேபோல் தாமும் கேட்கலாமா என்கிற யோசனையில் இருக்கிறாராம் சசிகலா.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.