Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

March 28, 2017

ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்தை குடியரசு தலைவராக்க வேண்டும் - சிவசேனா கோரிக்கை


ஆர்.எஸ்.எஸ் இயக்கத் தலைவர் மோகன் பகவத்தை அடுத்த குடியரசுத் தலைவராக தேர்வு செய்வது குறித்து, தேசிய ஜனநாயக கூட்டணி கட்சித் தலைவர்கள் பரிசீலிக்க வேண்டும் என சிவசேனா கோரியுள்ளது. சிவசேனா மூத்த தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சஞ்சய் ராவத்தே இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார். இந்து தேசத்தை உருவாக்குவதற்கு மோகன் பகவத் குடியரசுத் தலைவராவது அவசியம் என கூறியுள்ளார். நீண்ட காலத்திற்கு பிறகு நாட்டில் இந்துத்துவத்திற்கான சூழல் உருவாகியுள்ளதாக ராவத் கூறியுள்ளார். பிரதமர் மோடியால் இந்துத்துவச் சூழல் சாத்தியமாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொது சிவில் சட்டம், ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சட்ட விவகாரம், ராமர் கோவிலை மீண்டும் கட்டுதல் உள்ளிட்ட பா.ஜ-வின் செயல் திட்டங்களை நிறைவேற்ற மோகன் பகவத் குடியரசுத் தலைவர் ஆவதால் மட்டுமே சாத்தியமாகும் என்பது சஞ்சய் ராவத்தின் உறுதியான நம்பிக்கை. இதனிடையே சிவசேனாவின் இந்த கருத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அரசியல் சர்ச்சைகளில் சிக்காத ஒருவரே குடியரசுத் தலைவர் ஆக வேண்டும் என்பது காங்கிரஸின் கருத்தாகும்.

இது குறித்து பேசிய காங்கிரஸ் தலைவர்களில் ஒருவைான பி.எல்.புனியா, BJP - RSS செயல்திட்டம் அனைவரும் அறிந்ததே. மோடி பிரதமரானால் மோகன் பகவத் போன்றவர்கள் குடியரசுத் தலைவராவது எளிது. ஆனால் இது நிகழ்வதற்கு அரசியல் சட்டம் ஒத்துழைக்காது. ஏனெனில் பிரச்சனைக்குரியவராக இல்லாத ஒருவர், மற்றும் ஒருமித்த முடிவின் அடிப்படையிலேயே குடியரசு தலைவர் தேர்வு செய்யப்பட வேண்டும் என்றார். ஜனாதிபதியாக உள்ள பிரணாப்பின் பதவிக் காலம் வரும் ஜுலை மாதத்துடன் நிறைவுறுகிறது. இந்நிலையில் புதிய குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான அரசியல் நகர்வுகள் துவங்கியுள்ளன.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.