March 22, 2017
மனைவிக்கு ஏன் அல்வா வாங்கிட்டு போகணும் தெரியுமா ?
அல்வா பிறந்த கதை உங்களுக்கு தெரியுமா ?
ஒரு பையனுக்கு புதுசா கல்யாணம் ஆகுது,கொஞ்ச நாள் கழிச்சு வேலைக்கு போனவன் திரும்ப வரும்போது புது மனைவிக்கு ஆசையாய் முறுக்கு வாங்கிவந்திருக்கிறான்.
அவன் மனைவி ராத்திரி பத்து மணிக்கு உட்கார்ந்து கடக்கு முடக்கு சத்தத்துடன் சாப்பிடுகிறாள்.
மறுநாள் நாள் காலையில் அவன் அம்மா சொல்றாங்க “பாத்து, வளர்த்து, படிக்க வச்சு, கல்யாணம் பண்ணிவச்ச ஆத்தாளுக்கு இது வரை எதாவது வாங்கி கொடுத்து இருக்கியா,ஆனா நேத்து வந்தவளுக்கு முறுக்கு” என்று சொல்லி மகனுடன் தனது முதல் சண்டையை ஆரம்பித்திருக்கிறார் அவனது அம்மா..
அதுவரை கள்ளம், கபடம் தெரியாத அந்த பையனுக்கு ஒரு யோசனை,முறுக்கு வாங்கி போய் கொடுத்தால் தானே பிரச்சனை,இன்று முதல் மனைவிக்கு அல்வா வாங்கி போய் கொடுப்போம் என்று வாங்கி செல்கிறான்.
அடுத்த நாள் அம்மா ஒன்றும் கேட்கவில்லை ஏன் என்றால் அவனது மனைவி சாப்பிடும் போது சத்தம் வரவில்லை. இச்சு இச்சு என்று மட்டும் சத்தம் வந்தது.
அம்மாவை ஏமாற்ற முதன் முதலில் அல்வா பயன்பட்ட காரணத்தால் அடுத்தவர்களை ஏமாற்றுவதற்கு அல்வா கொடுப்பது என்ற பெயரும் வந்தது..!!
மனைவிக்கு ஏன் அல்வா வாங்கிட்டு போகணும் தெரியுமா ?
Reviewed by மறத்தமிழன்
on
March 22, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
March 22, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.