Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

March 2, 2017

“குழந்தைகளுக்கு கட்டாயம் செக்ஸ் கல்வி” – இங்கிலாந்தில் சட்டம் அமல்


லண்டன்: இங்கிலாந்தில் உள்ள குழந்தைகளுக்கு செக்ஸ் கல்வியை கட்டாயம் போதிக்க வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது. பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியமான உறவுக்கு நான்கு வயதான குழந்தைகளுக்கு செக்ஸ் கல்வியை ஒவ்வொரு பள்ளிக்கூடத்திலும் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.
அதாவது, இதற்கு முன்பு வகுப்பறைகளில் குழந்தைகளுக்கு பாலியல் கல்வி வழங்குவதற்கு, பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். ஆனால், தற்பொழுது அதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
தகுந்த வயது வந்தவுடன் குழந்தைகளுக்கு பாலியல் கல்வி கொடுப்பது தான் சிறந்தது என்றும், இது அரசு நடத்தும் பள்ளிக்கூடங்களுக்கானது மட்டும் தான். தனியார் பள்ளிக்கூடங்களுக்கு இது பொருந்தாது என்றும் கூறியுள்ளது.
மேலும், பாலியல் கல்வியின் அவசியம் எதற்கென்றால் முறையான உறவுகளை தடுப்பதற்கும், செக்ஸில் இருந்து குழந்தைகளை பாதுகாப்பதற்கும், ஆபாசப்படங்களை பார்ப்பதில் இருந்து விலக்குவதற்கும் மற்றும் பாலியல் தொல்லைகளில் இருந்து பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு வழங்குவதற்காகவும் தான் என்றும் விளக்கம் அளித்துள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.