Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

March 14, 2017

மனைவியை கொன்ற சிறைக் கைதி உபி தேர்தலில் அமோக வெற்றி! அதிர்ச்சியில் நாட்டு மக்கள்!!


உபி மாநிலத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி அடைந்துள்ள நிலையில், அம்மாநிலத்தின் நவுடன்வா தொகுதியில் போட்டியிட்ட கொலைக் குற்றவாளி 80 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

இது பலருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காரணம் வெற்றி பெற்ற அமான் மணி திருப்பதி என்பவர் தனது மனைவியை கொலை செய்த குற்றத்திற்காக சிறையில் இருக்கின்றார்.

தனது மனைவியை கொன்று சடலத்தை காரில் வைத்து விபத்து என இவர் நாடகமாடியிருந்தார் சிபிஐ இவர் தனது மனைவியை கொலை செய்ததை உறுதி செய்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து சிறையில் அடைத்துள்ளது.

சிறையில் இருக்கும் ஒரு கொலை குற்றவாளி வெற்றி பெற்றுள்ளது உபி மாநில தேர்தல் உண்மையிலேயே முறைகேடு இன்றி நடந்ததா என்ற சந்தேகத்தையும் தன் மனைவியை கொன்ற கொலைக் குற்றவாளி கூட ஜெயித்து சட்டமன்ற உறுப்பினர் ஆகலாம் என்ற நமது நாட்டின் சிஸ்டத்தை கண்டு அதிர்ச்சியையும் நாட்டு மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது.

நேற்றை முன்தினம் நீதிமன்றம் இவருக்கு பெயில் வழங்கியுள்ளது குறிப்பிடதக்கது.

இவர் பாஜக வின் எதிர்கட்சியான சமாஜ்வாடி கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டவர். தனித்து போட்டியிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.