March 5, 2017
அமெரிக்காவில் சீக்கியர் மீது துப்பாக்கி சூடு ‘உங்கள் நாட்டிற்கு திரும்பி செல்லுங்கள்’ என கோஷம்
அமெரிக்காவில் டொனால்டு டிரம்ப் ஆட்சி அமைந்த பின்னர் வெளிநாட்டவர்கள் மீதான இனபாகுபாடு அதிகரித்து வருகிறது. டொனால்டு டிரம்ப் அரசு இஸ்லாமியர்களுக்கு எதிரான போக்கை கொண்டு உள்ளது. இதற்கிடையே இப்போது அங்கு இந்தியர்கள் மீது நடத்தப்படும் தொடர் தாக்குதலானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்திய என்ஜினீயர் சீனிவாஸ், கன்சாஸ் மாகாணத்தில் கடந்த 22-ந் தேதி மது விடுதி ஒன்றில் வைத்து, கடற்படை வீரர் ஆதம் புரிண்டனால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இந்த சம்பவத்தின் சுவடு மறைவதற்கு முன் இந்திய வர்த்தகர் ஹர்னிஷ் பட்டேல் சுட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்திய வர்த்தகர் ஹர்னிஷ் பட்டேல் படுகொலை செய்யப்பட்டது அமெரிக்க வாழ் இந்திய மக்களிடம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில் வாஷிங்டன்னின் கெனட் சிட்டியில் 39 வயது சீக்கியர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு உள்ளது. கெனட் சிட்டியில் வசித்து வரும் சீக்கியர் கடந்த வெள்ளிக் கிழமை அன்று காலையில் வாகனத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது அவ்வழியாக வந்த ஒரு மர்மநபர் அவரிடம் மோதலில் ஈடுபட்டு உள்ளார். இதனையடுத்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. அப்போது முகமுடி அணிந்து இருந்த மர்மநபர் துப்பாக்கியால் சீக்கியரை சுட்டார். இதில் சீக்கியரின் தோல்பட்டையில் காயம் ஏற்பட்டது. துப்பாக்கி சூடு நடத்திய மர்மநபர் தப்பிவிட்டார்.
இதனையடுத்து சீக்கியர் மீட்கப்பட்டு அங்குள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சீக்கியருக்கு உயிருக்கு ஆபத்து கிடையாது, சிகிச்சை பெற்று வருகிறார் என கெனட் சிட்டி போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த குற்ற சம்பவம் தொடர்பாக கெனட் சிட்டி போலீஸ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. இவ்விவகாரத்தில் அமெரிக்காவின் புலனாய்வு பிரிவான எப்பிஐயின் உதவியையும் கெனட் போலீஸ் நாடிஉள்ளது என தெரிகிறது. “நாங்கள் முதல்கட்ட விசாரணையில் உள்ளோம்,” என கெனட் போலீஸ் கமாண்டர் தாமஸ் கூறிஉள்ளார். அமெரிக்காவில் தொடர்ச்சியாக இந்தியர்கள் மீது இனவெறி வன்முறையானது பிரயோகிக்கப்படுவது மிகவும் கவலையளிப்பதாக உள்ளது.
அமெரிக்காவில் சீக்கியர் மீது துப்பாக்கி சூடு ‘உங்கள் நாட்டிற்கு திரும்பி செல்லுங்கள்’ என கோஷம்
Reviewed by மறத்தமிழன்
on
March 05, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
March 05, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.