Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

March 3, 2017

“ஹைதராபாத்தில் ஒரு அதிசய குடும்பம்” – விநோத நிகழ்வு!


ஹைதராபாத்தில் இருக்கும்  இந்த குள்ளர்கள் குடும்பம் மிக பிரபலம். ஆனால், நாம் இவர்களை குள்ளர்கள் என்று கூட அழைக்கக்கூடாது. ஒருவர் குள்ளமாக பிறப்பதிற்கு காரணமாக சொல்லப்படுவது,  Achondroplasia என்ற எலும்பு வளர்ச்சி குறைபாட்டின் காரணமாக, இவர்களுக்கு உடல் வளர்ச்சி பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த குடும்பத்தின் மூத்தவர் ராம் ராஜ்(52). இவர், ஹோட்டல்களில் நடைபெறும் திருமணத்திற்கு வரவேற்பாளராக நிற்கும் பணியை செய்து வருகிறார். தனது குடும்பத்தின் வாழ்க்கை நிலை குறித்து இவர் கூறியதாவது, எனக்கு வேலை கிடைப்பதே மிகவும் சிரமமான ஒன்று.

உங்களால் எப்படி சமாளிக்க முடியும் என்ற கேள்விகள் தான் எல்லோரிடம் இருந்தும் வருகிறது. அதுமட்டுமின்றி, சாலைகளில் எங்கள் குடும்பத்தினர் நடந்து செல்கையில், பிறர் எங்களை பார்த்து சிரிப்பார்கள்.

அதற்கடுத்ததாக, இப்படி குள்ளமாக இருக்கிறீர்கள், எங்கிருந்து வருகிறீர்கள் என்று நக்கலான கேள்வியை கேட்பார்கள். இந்த கேள்விகள் எங்களுக்கு மன வருத்தத்தை ஏற்படுத்தும் என்றும் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.