March 8, 2017
ஜெ.மரணத்துக்கு காரணம் திட்டமிட்டு கொடுக்கப்பட்ட ஓவர் டோஸ் மருந்துகள்?
ஜெயலலிதாவின் மரணத்துக்கு காரணமே திட்டமிட்டே அவருக்கு ஓவர் டோஸ் மருந்துகள் கொடுக்கப்பட்டிருக்கலாம் என்பதையே அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை கோடிட்டு காட்டுகிறது.
சென்னை: ஜெயலலிதாவுக்கான சிகிச்சை தொடர்பான அப்பல்லோ அறிக்கை பற்ற வைத்த தீ பற்றி எரிகிறது. ஜெயலலிதாவுக்கு கடந்த காலங்களில் கொடுக்கப்பட்ட மருந்துகள் மீதான சந்தேகத்தையும் அப்பல்லோ மருத்துவமனை கோடிட்டு காட்டியிருப்பதன் பின்னணியில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஜெயலலிதாவுக்கு சாதாரண காய்ச்சல், நீர்ச்சத்து குறைபாடு என கூறி செப்டம்பர் 22-ல் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அதற்கு பிறகு நோய் தொற்று தொடங்கி ஏகப்பட்ட பிரச்சனைகள் என அப்பல்லோ மருத்துவமனை கூறியது.
எக்மோ அகற்றம்
ஆனால் கடைசிவரை ஜெயலலிதாவை காப்பாற்ற முடியவில்லை. அவருக்கு மாரடைப்பு ஏற்பட வைத்து எக்மோ கருவியை அகற்றி உயிரை எடுத்துள்ளது அப்பட்டமாக அப்பல்லோ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த நபர்
இந்த எக்மோ கருவியை அகற்றுவதிலேயே ஒரு திடீர் நபர் குறியாக இருந்ததாக அப்பல்லோ மருத்துவர்கள் கூறியிருந்தனர். இதனால்தான் 24 மணிநேரத்துக்குள்ளேயே எக்மோ கருவி அகற்றப்பட்டது என்பதையும் அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை சுட்டி காட்டியுள்ளது.
மோடி எச்சரிக்கை
அத்துடன் ஜெயலலிதாவுக்கு கொடுக்கப்பட்ட கடந்த கால சிகிச்சைகள் குறித்தும் அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை கோடிட்டுக் காட்டியுள்ளது. ஏற்கனவே 2011-ல் அப்போது குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடி, ஜெயலலிதாவுக்கு தரப்படும் உணவில் பிரச்சனை இருப்பதை எச்சரித்திருந்தார்.
உணவே விஷம்
இந்த உணவே காலப்போக்கில் மெல்லக் கொல்லும் விஷமாகிப் போயிருக்கலாம் என்ற சந்தேகம் எழுப்பப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஜெயலலிதாவுக்கு தரப்பட்ட மருந்துகள் குறித்தும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஓவர் டோஸ் மருந்துகள்
ஜெயலலிதாவுக்கு மருந்துகளை ஓவர் டோஸாக கொடுத்திருக்கிறார்கள். இந்த மருந்துகளை சாப்பிடும்போது எதிர்விளைவுகளைத் தரக்கூடிய உணவையும் தந்திருக்கிறார்கள். இதனால்தான் அவரது உடலின் ஒவ்வொரு பாகங்களும் பாதிக்கப்பட்டதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால்தான் நீதி விசாரணை வேண்டும் என பல தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
ஜெ.மரணத்துக்கு காரணம் திட்டமிட்டு கொடுக்கப்பட்ட ஓவர் டோஸ் மருந்துகள்?
Reviewed by மறத்தமிழன்
on
March 08, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
March 08, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)



No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.