Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

March 2, 2017

கச்சா எண்ணெய் கொட்டிய எண்ணூர் கடலில் மீன்பிடிக்க, குளிக்க தடை! ஏன்?


எண்ணூர் கடற்கரையில் இரு கப்பல்கள் மோதியதில் கச்சா எண்ணெய் கொட்டப்பட்ட அந்த கடற்கரை பகுதியானது மீன் பிடிக்க தகுதியற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 28-ஆம் தேதி எண்ணூர் துறைமுகம் அருகில் கப்பல்கள் மோதி கச்சா எண்ணெய் கடலில் கொட்டியது. இதில் மீன்கள், ஆமைகள் உள்ளிட்ட கடல் வாழ் உயிரினங்கள் செத்து மிதந்தன. கச்சா எண்ணெய் படலம் எண்ணூர் முதல் மாமல்லபுரம் வரை பரவியது. இதனால் மீனவர்களுக்கு கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டன.
உடைந்த கப்பலில் இருந்து கொட்டிய எண்ணெய் கடல் நீரில் ஒரு அடி உயரத்திற்கு திட்டாக படர்ந்துள்ளதை பிரித்து எடுக்கும் பணியில் கடலோர காவல் படையினர் மற்றும் தொழில் நுட்ப வல்லுனர்களும் ஈடுபட்டனர்.

வெறும் கைகளாலும், வாளிகளாலும்தான் எண்ணெய் அகற்றப்பட்டு வருகிறது. 1800 பேர் எண்ணெய் அப்புறப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டனர்.

கச்சா எண்ணெய் கொட்டிய சென்னை எண்ணூர் கடல் பகுதி மீன்பிடிக்க தகுதியற்றது என தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்திற்கு அளித்துள்ள பதிலில், தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை கூறியுள்ளது.
மேலும் கச்சா எண்ணெய் கசிவால் மாசடைந்த எண்ணூர் கடல் பகுதி குளிக்கவும் தகுதியற்றது. எண்ணூர் கடலில் பிடிக்கப்பட்ட மீன் குறித்த ரசாயன அறிக்கை இன்னும் கிடைக்கப் பெறவில்லை என்றும் சுற்றுலா துறையின் பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.