March 4, 2017
நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தில் பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு
தி நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் கோ லிமிடெட் நிறுவனத்தில் பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு வந்துள்ளது.
தி நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் கோ லிமிடெட் நிறுவனத்தில் உதவியாளர் பணிக்கு 984 பணியிடங்கள் காலியாக உள்ளன. நாடு முழுவதும் உள்ள பட்டதாரிகள் இந்த உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
கல்வித் தகுதி -
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
அவரவர் சார்ந்த மாநில பிராந்திய மொழியைப் பற்றிய போதிய அறிவு பெற்றிருத்தல் வேண்டும்.
வயது வரம்பு -
18 வயதிலிருந்து 30 வயதிற்குள் இருக்க வேண்டும். (30 ஜூன் 2017ம் தேதிக்குள் 30 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்)
ஊதியத் தொகை - Rs. 14435 - 40080 / மாதம்
விண்ணப்பிக்க வேண்டிய தேதி -
விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் 2017 மார்ச் 6ம் தேதியிலிருந்து 2017 மார்ச் 29ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை -
விண்ணப்பதாரார்கள் இரண்டு கட்ட எழுத்துத் தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
முக்கிய விபரங்கள் -
ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய தேதிகள் - 2017 மார்ச் 6 முதல் 2017 மார்ச் 29ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டிய நாட்கள் - 2017 மார்ச் 6 முதல் 2017 மார்ச் 29ம் தேதி வரை விண்ணப்பக் கட்டணம் செலுத்தலாம்.
முதல்நிலைத் தேர்வு நடை பெறும் நாள்கள் - 2017 ஏப்ரல் 22 மற்றும் 2017 ஏப்ரல் 23 ஆகிய நாட்கள் ஆகும்.
மெயின் தேர்வு நடை பெறும் நாள் - 2017 மே 23 அன்று நடை பெறும்.
இந்தத் தேர்வுப் பற்றிய முழு விபரங்களை தி நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் கோ லிமிடெட் என்ற பெயரிலுள்ள இணையதளத்தில் மார்ச் 6ம் தேதியிலிருந்து பெற்றுக் கொள்ளலாம்.
நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தில் பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு
Reviewed by மறத்தமிழன்
on
March 04, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
March 04, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.