March 8, 2017
தமிழ்நாட்டிலும் சமஸ்கிருதம் கட்டாயமாகும்! சமஸ்கிருதத்தை ஏன் படிக்க மறுக்கிறீர்கள்? மத்திய அமைச்சர் ஆவேசம்!
மத்திய அரசு விரைவில் 3 மொழிக் கொள்கையை இந்தியா முழுவதும் அறிமுகப்படுத்த உள்ளதாக தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தெரிவித்துள்ளார்.
“3 மொழிகளை படிப்பதால், குழந்தைகளின் அறிவு செறிவடையும். அவர்கள் பல மொழிகளை பேச முடியும். இந்த விவகாரத்தை நான் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சருக்கு எடுத்துச் வேன்.” மெட்ராஸ் சமஸ்கிருத கல்லூரியின் நிகழ்ச்சியில் இவ்வாறு கூறி இருக்கிறார் நிர்மலா சீத்தாராமன்.
மேலும் அவர் கூறியதாவது, “ சமஸ்கிருதம் குரோஷியா நாட்டில் பள்ளிகளில் கற்றுத் தரப்படுகிறது. பிலிப்பைன்ஸ் நாட்டு மக்கள் பேசும் மொழியில் சமஸ்கிருதம் கலந்திருக்கிறது. சமஸ்கிருதம் எளிமையான அதே நேரம் வளம் மிகுந்த மொழி.
தென்கிழக்கு ஆசிய நாடுகளை வென்ற பிறகு ராஜராஜ சோழன் தகவல் தொடர்பிற்கு சமஸ்கிருதத்தை பயன்படுத்தினார். அதற்காக உங்களது உள்ளூர் மொழிகளை பேச வேண்டாம் என கூறவில்லை. அதே நேரம் சமஸ்கிருதத்தை சுமையாக கருதக் கூடாது. சமஸ்கிருதத்தை கற்றுக் கொண்டால் உங்களது குழந்தைகள் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.
சுதந்திரத்திற்கு முன்பு திருப்பதியில் அதர்வ வேதத்தை கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்கள் யாரும் இல்லை. அதே நேரம் குஜராத் மாநிலம் மெஹ்சனா மாவட்டத்தில் ஒரு கிராமம் முழுக்க அதர்வ வேத சமஸ்கிருத ஆசிரியர்கள் இருந்தனர். அவர்களில் ஒரு குடும்பம் காஞ்சி பரமாச்சரியாவால், திருப்பதிக்கு கொண்டுவரப்பட்டது. ஆனால் அவர்கள் தற்போது அங்கில்லை. சமீபத்தில் அவர்களை நான் குஜராத்தில் கண்டேன்.
அந்த சமஸ்கிருத ஆசிரியரின் மகனிடம் பேசினேன். அவர் தனக்கு வேதத்தை கற்றுக் கொள்வதிலோ, சமஸ்கிருதத்தை கற்றுக் கொள்வதிலோ ஆர்வம் இல்லை என்றார். அவரது மகள் தற்போது சார்டட் அக்கவுண்ட் படித்து வருவதால், அதற்கு பிறகு சமஸ்கிருதத்தை பார்த்துக் கொள்ளலாம் என தெரிவித்தார்.” இவ்வாறு சமஸ்கிருதத்தை யாரும் படிக்க விரும்பவில்லை என வேதனை தெரிவித்தார் நிர்மலா சீத்தாராமன்.
தமிழ்நாட்டிலும் சமஸ்கிருதம் கட்டாயமாகும்! சமஸ்கிருதத்தை ஏன் படிக்க மறுக்கிறீர்கள்? மத்திய அமைச்சர் ஆவேசம்!
Reviewed by மறத்தமிழன்
on
March 08, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
March 08, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.