Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

March 12, 2017

சசிகலாவின் தம்பி திவாகரன் கை ஓங்குகிறது..!! கடுப்பில் திவாகரனின் சம்மந்தியை கரூருக்கு தூக்கியடித்த


அதிமுகவில் கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சசிகலா மற்றும் டிடிவி தினகரன், திவாகரன், நடராஜன் உட்பட 20க்கும் மேற்பட்ட குடும்ப உறுப்பினர்களை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பதவிகளில் இருந்தும் ஜெயலலிதா நீக்கி வைத்திருந்தார்.
மேலும் அவர்களின் ஆதரவாளர்களையும் கட்சியை விட்டு நீக்கினார். பலர் மீது குற்ற நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன. அதில் சசிகலா தவிர வேறு யாரையும் கட்சியில் சேர்க்கவில்லை.
ஆனால், அவர்களின் நீக்கம் ஜெயலலிதா உயிருடன் இருந்தவரை தொடர்ந்தது. ஆனால், ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு நிலைமை தலைகீழாக மாறியது.
குறிப்பாக சசிகலா சிறைக்கு செல்வதற்கு முதல் நாள் டிடிவி தினகரனை மட்டும் கட்சியில் உறுப்பினராக சேர்த்தார். கட்சியில் சேர்த்த சில நிமிடங்களில் அவருக்கு துணை பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது.
தற்போது அதிமுக முழுக்க முழுக்க தினகரனின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. தினகரன் கட்சியிலும், ஆட்சியிலும் செல்வாக்கு பெற்று வருவது சசிகலாவின் கணவர் நடராஜன், தம்பி திவாகரன் ஆகியோருக்கு பிடிக்கவில்லை.
இதில் தினகரன்-திவாகரன் மோதல் உச்சக்கட்டத்தை எட்டியது. குறிப்பாக திவாகரனின் சம்மந்தியான கூடுதல் எஸ்பி ஜெயச்சந்திரனை, கரூருக்கு தூக்கியடிக்கவும் தினகரன் உத்தரவிட்டார்.
இது சசிகலா உறவினர்கள் குடும்பத்தில் பெரும் பூகம்பத்தை ஏற்படுத்தியது.
இதனால் கடந்த சில நாட்களாக பொது நிகழ்ச்சிகளில் கூட கலந்து கொள்ளாமல், நடராஜன், திவாகரன் ஆகியோர் தவிர்த்து வருகின்றனர்.
இந்தநிலையில், நேற்று முன்தினம் அதிமுகவின் கட்சிப் பத்திரிகையில் டிடிவி தினகரன், பலரை கட்சியில் சேர்ப்பதற்கான அறிவிப்பை வெளியிட்டார்.
அதில் டெல்டா மாவட்டங்களில் திவாகரனுடன் நெருக்கமாக இருந்ததால் நீக்கப்பட்ட பலரும் தற்போது கட்சியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதனால், டெல்டா மாவட்டங்களில் திவாகரனுடன் நெருக்கமாக இருந்த பலரும் சேர்க்கப்பட்டுள்ளதால் அவர் பலம் பெற்று வருவதாக அவரது ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர்.
சசிகலா குடும்பத்தினருக்கு வேண்டியவர்கள் என்பதால் ஜெயலலிதாவால் நீக்கப்பட்ட பலரையும் தற்போது தினகரன் கட்சியில் சேர்த்து வருகிறார்.
இது அதிமுகவினரிடையே பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.